நிறுத்துங்க.. ₹1,800 கோடியை அப்படியே பாஸ் செய்த விஜய்.. கோட்டையில் போட்ட தரமான உத்தரவு.. ஏன்?

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் பல்வேறு முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது முந்தைய டெண்டர்களை ஆய்வு செய்யும் பணிகளை ஈடுபடுகிறார். சில டெண்டர்களை வாங்கியவர்கள் பணிகள் விஜய்க்கு பிடிக்கவில்லையென்று கூறப்படுகிறது.

    Advertisement

    விஜய் எடுக்கும் ஆக்சன்

    சென்னை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தமிழக அரசு அதிரடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் ₹1,800 கோடி நிலுவைத்தொகையை நிறுத்தி வைக்கவும், புதிய திட்டங்களுக்கான டெண்டர்களை தற்காலிகமாக ரத்து செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) ஆட்சியைப் பிடித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். புதிய அரசு பதவியேற்றது முதலே நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசுத் துறைகளில் டெண்டர் நடைமுறைகள் அனைத்தும் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதில் புதிய அரசு உறுதியாக உள்ளது.

    25 சதவீத 'கமிஷன்' புகார்:

    இந்தச் சூழ்நிலையில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஒப்பந்ததாரர்கள் பணிகளைத் தரமாகச் செய்யாமல், ஒப்பந்தங்களைப் பெறுவதற்கும் தங்களின் லாபத்தை உறுதி செய்வதற்கும் தங்களுக்கு மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு 25 சதவீதம் வரை 'கமிஷன்' கொடுத்துள்ளதாகப் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பணிகளின் தரத்தை முறையாக ஆய்வு செய்யாமலேயே, முந்தைய ஆட்சியில் தாராளமாகப் பணம் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    இந்த விவகாரம் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் அவசர அவசரமாகக் கோரப்பட்ட டெண்டர்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ஒப்பந்ததாரர்கள் பணிகளைத் தரமான முறையில் செய்துள்ளார்களா என்பதை நேரடியாகக் கள ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    அதிகாரிகள் விளக்கம்:

    இது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
    "கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டங்களில், 'கமிஷன்' கலாசாரம் ஆதிக்கம் செலுத்தியதால் ஒப்பந்ததாரர்களால் தரமான பணிகளை வழங்க முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாகப் பணிகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன.

    Advertisement

    திமுக ஆட்சிக் காலத்தில் பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் ₹1,800 கோடி வரை நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்தத் தொகையை விடுவிக்கக் கோரி ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவர்கள் செய்த பணிகளின் தரம் குறித்த ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின் முடிவில், பணிகள் தரம் குறைந்ததாகவோ அல்லது விதிகளை மீறிச் செய்யப்பட்டதாகவோ கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத்தொகை எக்காரணம் கொண்டும் விடுவிக்கப்பட மாட்டாது."

    கருப்புப் பட்டியலில் ஒப்பந்ததாரர்கள்:

    மேலும் அதிகாரிகள் கூறுகையில், "தவறு செய்த மற்றும் தரம் குறைந்த பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மாநகராட்சியின் 'கருப்புப் பட்டியலில்' (Blacklist) சேர்க்கப்படுவார்கள். இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் மாநகராட்சியின் எந்தவொரு புதிய திட்டங்களுக்கும் டெண்டர் கோர முடியாத நிலை ஏற்படும்.

    Advertisement

    இந்தக் கள ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் முழுமையாக முடியும் வரை சென்னை மாநகராட்சியில் எந்தவொரு புதிய திட்டப் பணிகளையும் தொடங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், முந்தைய ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் அவசர அவசரமாக டெண்டர் விடப்பட்டு, பணி ஆணைகள் (Work Orders) வழங்கப்பட்ட திட்டங்களையும் உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு, திட்டங்களுக்கான மதிப்பீடுகள் (Project Estimates) துல்லியமாகச் சரிபார்க்கப்படும். அதில் ஏதேனும் தவறுகள் அல்லது முறைகேடுகள் இருந்தால், திருத்தப்பட்ட புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அத்திட்டங்களுக்கு மீண்டும் புதிய டெண்டர்கள் கோரப்பட வாய்ப்புள்ளது" என்று அவர்கள் விரிவாகத் தெரிவித்தனர்.

    Advertisement

    புதிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை சென்னை மாநகராட்சி வட்டாரத்திலும், ஒப்பந்ததாரர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையான நிர்வாகத்தை நோக்கித் தமிழக அரசு எடுத்து வைக்கும் இந்த அடி, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    English Summary

    DMK-era Chennai Projects Under Scrutiny: CM Vijay Halts Tenders, Freezes ₹1,800 Crore