உளறி கொட்டிய சத்தியபாமா.. தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்.. சிக்கலில் தவெக

  • தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தாராபுரத்தில் வாக்குப்பதிவு நாளிலும் தவெக பணம், டோக்கன், பரிசு பொருட்கள் கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. கடந்த தேர்தலில் செலவு செய்தது, தவெகவில் இணைந்தது குறித்து சத்தியபாமா பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அறிவித்ததில் இருந்து தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு தவெகவில் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். கடந்த தேர்தலில் ரூ.31 கோடி செலவு செய்தேன். இப்போது தவெகவில் கட்சிக்காரர்கள், கூட்டணி கட்சியினர் தங்குவதற்காக மட்டும் ரூ.14 லட்சம் செலவு செய்ததாக சத்தியபாமா பேசும் வீடியோ வெளியானது. ஆனால் இது சித்தரிக்கப்பட்டது என சத்தியபாமா மறுத்தார்.

    Advertisement

    தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

    இதுகுறித்து தலைமை செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் அளித்தனர். பிறகு அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆஸ்டின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வீடியோ வெளியாகியுள்ளது. தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் விசாரிக்க வேண்டும். தேர்தல் செலவில் அவர் சொன்ன 14 லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளதா. அதை குறிப்பிட்டு பதிவேட்டில் வேட்பாளரோ அவரின் முகவரோ என்று ஆய்வு செய்ய வேண்டும்.

    Advertisement

    இந்திய தண்டனை சட்டம், தேர்தல் விதிகள்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒரு வேட்பாளர் செலவு செய்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அதிகபட்சம் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதை புகாரில் சொல்லியுள்ளோம். கடந்த தேர்தலில் நான் ரூ.31 கோடி செலவு செய்தேன். ஒரு பைசா கூட கட்சியில் இருந்து கொடுக்கவில்லை. எடப்பாடி காசு கொடுக்க மாட்டார் என்றும் வேட்பாளர் கூறியுள்ளார். இதுவே மிகப்பெரிய புகார்.

    தாராபுரம் இடைத்தேர்தல் சூழலிலும் சத்தியபாமா உண்மையை பேசி இருக்காங்க.. வீடியோ பற்றி வீரபாண்டியன்!
    Advertisement

    தவெக அதிர்ச்சி

    இதற்கே அவர் தேர்தலில் நிற்க முடியாது. அதை முறையாக ஆய்வு செய்திருந்தால் சத்தியபாமா எப்போதோ தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் நிலையே வந்திருக்காது. தேர்தல் விதிப்படி 6 மாதம் சிறை தண்டனை கொடுக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டுள்ளனர். இந்தமுறை அலட்சியமாக விடாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.40 லட்சம் மட்டுமே செலவு செய்ய முடியும். கட்சிக்காரர்களை ரிசார்டில் தங்க வைத்த செலவை அவர் கணக்கில் காட்டியுள்ளாரா.

    இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வேட்பாளர் தங்கள் செலவை கணக்கு காட்ட வேண்டும். வேட்பாளர் பணமாக செலவு செய்ய முடியும். இதற்கென ஒரு வங்கி கணக்கு திறந்து, அதன் காசோலை மூலமாக தான் செலவு செய்ய வேண்டும். கட்சிக்காரர்கள் தங்குவதற்கான அறைக்கு மட்டும் 14 லட்சம் செலவு செய்ததாக கூறியுள்ளார். அதை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும். அவர்கள் கணக்கில் காட்டவில்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினர். இந்த புகாரால் தவெக அதிர்ச்சியடைந்துள்ளது.

    English Summary

    Dharapuram TVK candidate Sathyabama's video on cash sparks controversy. DMK gave compliant with Election commission on this.