தங்கமே தளபதி..பனையூர் கதவை தட்டிய ‘பாடகர்’ மாஜி! டீல் பேசிய ‘கோடீஸ்வர’ அமைச்சர்! கொந்தளித்த உ.பி.கள்

  • சென்னை: தென்னகத்திலிருந்து ஒரு முக்கிய திமுக புள்ளி தமிழக வெற்றி கழகத்துக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வழக்கமாக அதிமுகவிலிருந்து தான் மாஜிக்கல் தமிழக வெற்றிக்கழகத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் தாவி வந்த நிலையில் தற்போது திமுகவில் தென்கோடியில் இருக்கும் ஒரு 'பாடகர்' பெயரைக் 'தங்கமான' முன்னாள் அமைச்சர் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேசி வருகிறாராம். மேலும் தனது செல்வாக்கை நிலை நாட்ட பிரபலங்களை அழைத்து சிறுபான்மை மாநாடு ஒன்றையும் நடத்தியுள்ளார். அதற்காக திமுகவினரையே அழைத்து வந்திருப்பது உடன்பிறப்புகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார். திமுக எதிர்பாராத மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

    Advertisement

    அதிமுக வெல்லாது என முன்னரே கணிக்கப்பட்ட நிலையில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும் என நம்பிக்கையுடன் இருந்தனர் அந்த கட்சியினர். அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோற்றத்தை இன்னும் திமுகவினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

    திமுக தோல்வி

    அது மட்டும் இல்லாமல் துரைமுருகன், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய தலைகளும் தோல்வியை சந்தித்தனர். அது மட்டும் அல்லாமல் சில பெரும் புள்ளிகளும் இந்த தேர்தலில் போட்டியிட முடியாமல் ஒதுங்கிக் கொண்டனர் அல்லது திமுக தலைமை போட்டிட வாய்ப்பு தரவில்லை. தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவும் தலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    Advertisement

    அதிமுக மாஜிகள்

    அதிமுகவை பொறுத்தவரை சில மாவட்டங்களின் கட்டுப்பாட்டை கையில் வைத்திருந்த மாவட்டச் செயலாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர். அந்த வகையில் கடம்பூர் ராஜு, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் என பலரை சொல்லலாம். அதே நேரத்தில் திமுகவிலிருந்து மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் யாரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவவில்லை. சில ஒன்றிய செயலாளர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட சிலர் மட்டுமே சென்றிருக்கின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகம்

    இந்த நிலையில் தென் மாவட்டத்தின் முக்கியமான முன்னாள் அமைச்சர் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கடி துறை மாற்றம் செய்யப்பட்ட அந்த முன்னாள் அமைச்சர் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் போட்டியிட்டாலும் வெல்ல மாட்டார் என்பதால் தான் கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை என கூறப்பட்டது. தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்த அந்த முன்னாள் அமைச்சர், சமீபத்தில் நடந்த திமுக போராட்டத்தில் கட்சி வேட்டி அணியாமல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    'கோடீஸ்வர' அமைச்சர்

    அதே நேரத்தில் அவர் சென்றால் செல்லட்டும் என்ற மனநிலையில்தான் திமுகவும் இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு 'கோடீஸ்வர' அமைச்சர் மூலம் பலமுறை பனையூர் கதவைகளை தட்டி பார்த்தார் அந்த தங்கமான முன்னாள் அமைச்சர். ஆனால் அவரை சேர்த்தால் கட்சி உருப்படாது என உள்ளூர் தலைகள் முட்டுக்கட்டை போட முடிவு எடுப்பதை தள்ளிப் போட்டு வந்தார் விஜய். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் மிகப் பிரமாண்டமான மாநாடு ஒன்றை நடத்தியிருக்கிறார்.

    'பாடகர்' அமைச்சர்

    ஏற்கனவே உள்ளூரில் சிறுபான்மை அமைப்புகளை திரட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர், தன் பின்னால் ஒரு சமுதாயமே இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ளவே இந்த நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதாக சொல்கின்றனர். மேலும் தொடர்ந்து கோடீஸ்வர அமைச்சர் மூலம் 'பாடகர்' அமைச்சர் பனையூர் கதவுகளை தட்டி வரும் நிலையில் அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் ஐக்கியமாகலாம் என்கின்றனர்.

    Advertisement

    கழக உடன்பிறப்புகள்

    அதே நேரத்தில் சமீபத்தில் அந்த முன்னாள் அமைச்சர் நடத்திய மாநாட்டுக்கு கூட திமுகவினரை அழைத்துப் போய் தான் மாஸ் காட்டினார். தற்போது திமுகவில் இருக்கும் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி திமுகவினரை திரட்டி மாநாடு நடத்திவிட்டு அதை வைத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்ல நினைப்பது என்ன நியாயம் என கேட்கின்றனர் கடைக்கோடி மாவட்ட கழக உடன்பிறப்புகள்.

    English Summary

    A senior DMK former minister is reportedly seeking entry into Vijay’s TVK, triggering anger among grassroots party workers.