விடாது கருப்பாக..தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கு! திமுக மாஜி குடும்பத்துக்கு 3 ஆண்டு ஜெயில்! பின்னணி

  • சென்னை: மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மரணம் அடைந்த பிறகும், அவரது உறவினர்களுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. செங்குட்டுவன் மற்றும் அவரது மருமகன் ராஜலிங்கம் இறந்துவிட்ட நிலையில் செங்குட்டுவனின் மகன்களுக்கும், மகள் மற்றும் சகோதரரின் மகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    கடந்த 1996 - 2001 திமுக ஆட்சிக் காலத்தில் மருங்காபுரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான செங்குட்டுவன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

    Advertisement

    2001 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையில் திமுகவிலிருந்து விலகிய அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பிறகு 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் திமுகவிலேயே இணைந்தார்.

    செங்குட்டுவன்

    இதற்கிடையே திமுக ஆட்சிக் காலத்தில் அவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வருமானத்தை விட சுமார் 81 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அளவுக்கு முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம், செங்குட்டுவனின் சகோதரரின் மகளான வள்ளி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.

    Advertisement

    சொத்து குவிப்பு வழக்கு

    இந்த வழக்கின் விசாரணை திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் செங்குட்டுவனும், அவரது மருமகனான ராஜலிங்கமும் உயிரிழந்தனர். இதை அடுத்து அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் கைவிடப்பட்டது. அதே நேரத்தில் மற்றவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன்களான பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, சகோதரரின் மகள் வள்ளி ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    3 ஆண்டு சிறை

    அனைவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையோடு தலா 2000 ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம், சக்திவேல், மீனாட்சி, வள்ளி ஆகிய நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தண்டனை பெற்றவர்கள் தரப்பு தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

    Advertisement

    தண்டனை உறுதி

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிகே இளந்திரையன் சொத்து குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தார். மேலும் அவர்களது மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளார்.

    திருச்சி திமுக

    திருச்சி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட செங்குட்டுவன் பலம் பொருந்திய அமைச்சராக வலம் வந்தவர். அவருக்குப் பிறகுதான் திருச்சி திமுகவை கே.என் நேரு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக அதிமுக என மாறிமாறி பயணித்தாலும் அவர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு மட்டும் கைவிடப்படவில்லை.

    Advertisement

    லஞ்ச ஒழிப்புத்துறை

    20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் செங்குட்டுவன் மரணம் அடைந்த நிலையிலும், தற்போது தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு பணத்தை தொட்டவர்களை விட மாட்டோம் என தவெக அரசு சூலுரைத்திருக்கும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை பலமாக வாதங்களை எடுத்து வைத்ததால் செங்குட்டுவன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தினர்.

    English Summary

    Madras High Court upholds three-year jail terms for four family members in a 26-year-old disproportionate assets case.