‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்'

  • சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்று பேசினார். கூட்டத்தின் முடிவில் மகளிர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் 'வாட்ச்' அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனை பெற திமுக மகளிர் அணி நிர்வாகிகள் போட்டி போட்ட வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியை தழுவி ஆட்சியை பறிகொடுத்துள்ளது. முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திடம், திமுக வீழ்ந்தது. இந்நிலையில் தான் திமுக தனது கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

    Advertisement

    சட்டசபை தேர்தலில் கட்சி பின்னடைவை சந்தித்தற்கான காரணம் பற்றி தனி குழு அமைக்கப்பட்டு தொகுதி வாரியாக கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், ''நம்மை நம்பி ஒரு கோடியே 55 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். இதனால் விழிப்புணர்வு ஏற்படத்தினால் மட்டுமே போதாது. லட்சக்கணக்கான இளம்பெண்களை திமுகவை நோக்கி இழுத்த வர வேண்டும். அதுமாதிரி நம்முடைய செயல்பாடு இருக்க வேண்டும்.

    Advertisement

    நம்மிடம் வரலாறு இருக்கு. கொள்கை இருக்கு. சாதனை இருக்கு. எதிர்காலத்துக்கான தொலைநோக்கு பார்வை இருக்கு. இவை எல்லாவற்றையும் அவர்கள் புரிந்து கெள்ளும்படி எடுத்து கூற வேண்டும். புரிந்து கொண்டால் அவர்கள் திமுக நோக்கி தான் வருவார்கள். அதற்கான பொறுப்பும், கடமையும் நம்முடைய மகளிர் அணியான உங்களிடம் தான் இருக்கிறது.

    நம்முடைய இயக்கம் அறிவு இயக்கம் என்பதை காட்ட வேண்டும். எல்லோரையும் நம் இயக்கத்தை நோக்கி அழைத்து வர வேண்டும். தலைவர் கருணாநிதி அடிக்கடி ஒன்றை சொல்வார். கட்சி என்பது தலை. ஆட்சி என்பது கிரீடம். தலையிருந்தால் கிரீடத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். ஆனால் கிரீடத்தை மட்டும் வைத்து கொண்டு தலையை எப்போதுமே தேட முடியாது. இப்போது நாம் தலையை பலப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளோம். இதனால் மகளிர் அணியினர் இளம்பெண்களை கட்சிக்கு அழைத்து வர வேண்டும்'' என்று கூறினார்.

    Advertisement

    கூட்டம் முடிவடைந்த பிறகு பங்கேற்ற நிர்வாகிகளுக்கு'வாட்ச்' வழங்கப்பட்டது.இதனை பார்த்த திமுக மகளிர் அணி நிர்வாகிகள் போட்டி போட்டுக்கொண்டு 'வாட்ச்' பெற்று சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

    'வாட்ச்' பெற்ற ஒருவர் கூறுகையில், ''இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தவெக அரசை கண்டித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பெண்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை. எங்கள் இயக்கத்தில் முதல்வராக இருந்த ஸ்டாலின் சாதனையை ஸ்டீக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துகிறார்.

    எங்களுக்கு பரிசு தந்து இருக்காங்க. கைக்கடிகாரம் தந்து உள்ளார்கள். எங்களின் அன்பு சகோதரி கனிமொழி எல்லாருக்கும் கைக்கடிகாரம் வழங்கி எங்களை உற்சாகப்படுத்தி உள்ளார். எங்களின் கடைசி மூச்சி இருக்கும் வரை திமுகவிற்காக உழைப்பு தொடரும்'' என்றார்.

    English Summary

    DMK gives watch to Wome Wings:A consultative meeting of DMK Women's Wing office-bearers was held today at Anna Arivalayam in Chennai. DMK President M.K. Stalin participated and addressed the gathering. At the conclusion of the meeting, wristwatches were presented as gifts to all the Women's Wing office-bearers; a video showing them scrambling to receive the gifts is currently circulating online.