பாரதிதாசனுக்கு திமுகவும் உதவி தொகை கொடுக்கலை.. அதையும் செய்தி போடுங்க.. திருமாவளவன் காட்டம்

  • சென்னை: அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகை திட்டத்தில், பாரதிதாசன் என்கிற மாணவர் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படிக்கிறார். அரசு வழங்கும் உதவி தொகை கிடைக்கவில்லை என கண்ணீருடன் வீடியோ வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாடுகள் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் அந்த மாணவர் முந்தைய அரசையும் குற்றம் சாட்டியுள்ளார். அதையும் செய்தி போடுங்கள் என்று திருமாவளவன் கோபமாக பதில் அளித்தார்.

    Advertisement

    சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளோம். புரட்சியாளர் அம்பேத்கருக்கு முன்னோடியாக பொது வாழ்க்கையில் களமாடியவர் இரட்டைமலை சீனிவாசனார். அம்பேத்கருடன் முதலாம், இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றவர்.

    Advertisement

    360 மாணவர்களுக்கு உதவி

    மண்ணின் மைந்தர்களுக்கு, பூர்விக மக்களின் ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுத்தவர். வயது வந்த அனைவருக்கும் வாக்குவரிமை என குரல் கொடுத்து, வென்றெடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன். அவருடன் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் புரட்சியாளர் அம்பேத்கர். அவருக்கு நன்றி உணர்வுடன் வீரவணக்கம் செலுத்துகிறோம். அவரின் வழியில் சமூகநீதி, சமத்துவம் வென்று எடுக்க உறுதி ஏற்போம்.

    மாணவர் பாரதிதாசன் விவகாரம் குறித்து, அரசு செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆகியோரிடம் நாங்கள் நேரிலும், தொலைபேசியிலும் பேசியுள்ளோம். இந்தாண்டு அயல்நாட்டில் கல்வி பயிலும் 360 மாணவர்களுக்கு உதவி தொகை அரசு வழங்குகிறது. இதன் மதிப்பு ரூ.131 கோடி என்று அரசு கூறியுள்ளது. இரண்டாம் ஆண்டுக்கான உதவித் தொகை, பல்கலைக்கழக கல்வி கட்டணம், அவர்களின் வாழ்விட செலவு ஆகியவற்றுக்காக ரூ.12 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    விரைவில் எஞ்சிய தொகை

    மீதம் ரூ.24 லட்சம் கொடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்துக்கு இமெயில் வாயிலாக பதில் வழங்கப்பட்டுள்ளதாக செயலாளர் கூறியுள்ளார். எஞ்சிய தொகையை விரைவில் அனுப்புவோம் என்று சொல்லியுள்ளனர். விரைவில் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். எல்லா மாணவர்களும் என்ன விதிகளை பின்பற்றுகிறார்களோ, அதையே இந்த மாணவரும் பின்பற்ற வேண்டும் என நாங்கள் கேட்டுள்ளோம் என்பதை அரசு கூறியுள்ளது.

    அவரை தனிப்பட்ட முறையில் வஞ்சிப்பதற்கு உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. அவருக்கு விரைவில் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொது மக்களின் கருத்தை அறிந்து, அவர்களின் இசைவோடு தான் புதிய திட்டத்தை செயல்பட முடியும். புதிய தலைமை செயலகம் விஷயத்திலும் அதை செய்வார்கள். அதை மீறி எல்லாம் அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது" என்றார்.

    Advertisement

    திமுகவையும் கேளுங்க

    செய்தியாளர்கள் மீண்டும் மாணவர் பாரதிதாசன் குறித்து கேட்டார்கள். அதற்கு திருமாவளவன், "இந்த விவகாரத்தில் குற்றம் சொல்வர்கள் அதற்கான உள்நோக்கத்தையும் சொல்லட்டும். கடந்த அரசும் கொடுக்கவில்லை என்பதை அவர் குற்றச்சாட்டாக சொல்லியுள்ளார். அதையும் போடுங்கள். சும்மா இதையவே கேட்காதீங்க. கடந்தமுறை எஸ்.எஸ்.டி ஆணைய துணை தலைவர் இமயம் தலையிட்டு பேசினார். இப்போது நாங்கள் தலையிட்டு பேசுகிறோம்" என்று கூறி சென்றார்.

    English Summary

    VCK Chief Thirumavalavan said, DMK Government also not give fund to Student Bharathidhasan. Media should release news on that also.