கேஎன் நேருவை நெருக்கும் தமிழக அரசு.. ED கடிதம் எழுதியும் திமுக அரசு பாதுகாத்தது.. ஐகோர்ட்டில் வாதம்

  • சென்னை: நகராட்சி நியமன முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவை முந்தைய திமுக அரசு பாதுகாத்தது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை கடிதம் எழுதியும் கேஎன் நேருவை திமுக அரசு பாதுகாத்தது என குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

    Advertisement

    தன் தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு கே என் நேரு மீது மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மனு மீது தீர்ப்பளிக்கும் வரை கேஎன் நேரு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்திற்கு ரூ.634 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யக் கோரி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு முன்னாள் அமைச்சர் கே என் நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    Advertisement

    இந்த மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி சுஷ்ரிந்த் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் நிதின் நாராயணன் ஆஜர் ஆகி வாதாடினார். அவர் கூறியதாவது:-

    அதிகாரிகள் நியமனம் தொடர்பாக முறைகேடுகள் நடந்துள்ளது. இது தொடர்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை கடிதம் எழுதிய போதும் திமுக தலைமையிலான தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அப்போதையை அமைச்சர் கேஎன் நேருவை பாதுகாப்பதில் தான் திமுக அரசு உறுதியாக இருந்தது. அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் அதிமுக இன்பதுரை தாக்கல் செய்த மனு மீது நோட்டீஸ் அனுப்பிய உயர் நீதிமன்றம், இந்த அவகாசத்தை பயன்படுத்தாமல் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதனை வழங்கவில்லை என கேஎன் நேரு தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தனர்" என்றார்.

    English Summary

    KN Nehru: The Tamil Nadu government has informed the Madras High Court that the previous DMK government shielded former Minister K.N. Nehru in the case concerning irregularities in municipal appointments. It alleged that the DMK government protected him despite the Enforcement Directorate having written a letter regarding the matter.