“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ!

  • சென்னை: திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, சமீப நாட்களாக தனது டோனை மாற்றியிருக்கிறது. குறிப்பாக வைகோவின் மகனும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, திமுக சின்னத்தில் போட்டியிட்டது அவமானம் என்று பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ், திமுக ஒரு நச்சுப்பாம்பு என்று விமர்சித்திருக்கிறார்.

    Advertisement

    மதிமுக தலைவர்கள் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருவதை உடன்பிறப்புகள் ரசிக்கவில்லை. கூடவே இருந்த காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும், விசிக மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் கழன்று போய்விட்டன. மதிமுக இப்படி விமர்சிப்பதால், அக்கட்சியை இன்னும் ஏன் கூட்டணிக்குள் வைத்திருக்க வேண்டும்? என்று உடன் பிறப்புகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    என்ன பேசினார் அர்ஜுன் ராஜ்?

    "பாம்புக்கு பால் வார்த்தாலும் நஞ்சை கக்கும். அதுபோல் திமுக ஒரு நச்சுப் பாம்பு. தில்லுமுல்லுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர். அவர்களுடன் இருக்கக்கூடாது என்பதே அனைவரின் கருத்து. மதிமுகவை திமுக அழிக்க நினைக்கிறது. நல்லது செய்வதுபோல் தீங்கு செய்கிறது, தவெகவுடன் மதிமுக கூட்டணி அமைக்கும் வரை தூரத்தில் இருந்து ரசிப்போம்" என்று பேசியிருக்கிறார்.

    இப்போது வந்து பாம்பு என்று பேசும் மதிமுக, தேர்தலுக்கு முன்பு தொகுதி பங்கீடு செய்யும்போதே திமுகவை விமர்சித்து வெளியேறி இருக்கலாமே! என்று உடன் பிறப்புகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    Advertisement

    மதிமுகவின் மிஸ்டேக்

    சொந்த சின்னத்தில் போட்டியிடாமல், திமுக சின்னத்தில் போட்டியிட்டதால், மதிமுக மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து சொந்த சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளில், பெரும்பான்மையான கட்சிகள் அனைத்தும் தற்போது தவெகவுக்கு ஆதரவு அளித்து அமைச்சர் பதவியை பெற்றிருக்கின்றன. ஐயுஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

    இப்படி இருக்கையில், மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் இந் வாய்ப்பை இழந்திருக்கிறது. இதனால், மதிமுக தலைவர்கள் திமுக மீது கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

    குறிப்பாக துரை வைகோ, "திமுக கூட்டணியில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே தொகுதிப் பங்கீடு குறித்து அதிருப்தியில் இருந்தன. ஆனால், கூட்டணி ஒற்றுமை கருதி நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டோம். எங்களைப் பொறுத்தவரை சின்னம் தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    MDMK, a partner in the DMK alliance, has recently shifted its tone. Notably, Durai Vaiko—Vaiko’s son and the party’s Principal Secretary—had remarked that contesting under the DMK symbol was humiliating. Following this, MDMK Chairman Arjun Raj criticized the DMK, describing the party as a "poisonous snake."