திமுக போட்டியே இல்லை.. இனி தவெக மட்டும்தான்.. நடிகர் ஜெய் பேச்சு


  • சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தவெகவின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்துள்ளது. விஜயை தொடர்ந்து பல நடிகர்கள் தவெக மூலம் அரசியல் என்ட்ரி கொடுத்துள்ளனர். நடிகர் லாரன்ஸ் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல நடிகர் ஜெய்யும் தவெக நிகழ்வுகளில் கலந்து வருகிறார். எதிர்காலத்தில் தவெக திமுக இடையே எல்லாம் போட்டி இருக்காது. தவெக மட்டும் தான் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நடிகர் ஜெய் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "நம்ம தளபதி, நம்ம சிஎம், முதலமைச்சர் விஜய் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருடன் ஒரு படத்தில் நான் தம்பியாக நடித்தேன். தமிழகத்தில் பலரும் அவரின் தம்பியாக நடிக்காமல், தம்பியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இங்கு இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. தவெக, திமுக இடையே தான் போட்டி என்று விஜய் சொல்லுவார்.

    Advertisement

    திமுக சீனிலேயே இல்லை

    மக்கள் அவர் மீது வைத்துள்ள அன்பு, நம்பிக்கையை பார்க்கும்போது எதிர்காலத்தில் இப்படி போட்டி எல்லாம் இருக்குமா என்று தெரியவில்லை. தவெக மட்டும் தான் இருக்கும் என்று நம்பிக்கை வருகிறது. இந்த அன்பும், பாசமும் அவருக்கு எப்போதும் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். அவர் நடிகர் என்பதால் என்னையும் நடிகனாக பார்க்க வேண்டாம். நான் நடிகனாக வரவில்லை. தளபதியின் தம்பியாக மட்டும் தான் இந்த நிகழ்ச்சியில் வந்துள்ளேன்.

    குறைகள் தீர்க்கப்படும்

    ஸ்க்ரீனில் மட்டும் தான் நான் நடிகன். உங்களின் தம்பி, அண்ணன், நண்பனாக தான் நானும் இருப்பேன். இதே நம்பிக்கை, மகிழ்ச்சியுடன் எப்போதும் இருந்த ஆதரவு வழங்குங்கள். உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும். நாங்கள் அப்போது சொல்வதைத்தான் இப்போது சொல்வோம். இப்போது சொல்வதைத்தான் எப்போதும் சொல்வோம். எந்த குறையாக இருந்தாலும் அண்ணன் தீர்த்து வைப்பார்" என்றார்.

    Advertisement

    அவரின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    English Summary

    Actor Jai said, CM saying Competition is only between TVK and DMK. DMK is not in the seen. TVK is the future of TN.