தமிழ்நாட்டுக்கு பெரும் தலைகுனிவு.. நிதியமைச்சர் மரிய வில்சனின் லட்சணத்தை பாருங்க - திமுக

  • சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் இன்று 23 பேர் அமைச்சராக பதவியேற்ற சில மணிநேரத்தில் எதிர்க்கட்சியான திமுகவின் ஐடி விங் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

    Advertisement

    ஆர்.கே. நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள மரிய வில்சன் குடும்பப் பிரச்சனை தொடர்பான காணொளி தொர்பான விஷயத்தை திமுக ஐடி விங் மீண்டும் மக்களின் நினைவுக்கு கொண்டு வந்துள்ளது.

    Advertisement

    திமுக ஐடி விங் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "Sofa model ஆட்சி நடத்தும் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் மரிய வில்சனின் இலட்சணத்தை பாருங்கள். வீடு புகுந்து ரவுடிசம் செய்தவரை அமைச்சராக்கி அழகு பார்ர்கிறார் முதல்வர் விஜய். இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா சார்?" எனக் கேள்வி எழுப்பியதுடன் #TVKFails என்ப ஹேஷ்டேக்-ஐயும் வீடியோவோடு சேர்த்து பதிவிட்டுள்ளது.

    இது மரிய வில்சன் தனது சொந்த சகோதரரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம், இது தேர்தல் பிரச்சார காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பரவிய சிசிடிவி மற்றும் மொபைல் காணொளிகள் இப்போது மீண்டும் திமுக பதிவிற்கு பின்பு வைரலாகி வருகின்றன.

    Advertisement

    இந்தச் சம்பவம் மரிய வில்சனின் சொந்த குடும்பப் பிரச்சனையுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான வழக்குகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு பிரமாணப் பத்திரங்களிலோ அல்லது முக்கிய குற்ற வழக்குகளாகவோ பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு குடும்பத் தகராறு என தேர்தல் பிரச்சார காலத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், மரிய வில்சன் நிதியமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்ட பின்பு திமுக மீண்டும் அதை மையப்படுத்தி விமர்சனம் செய்துள்ளது.

    தமிழக வெற்றி கழகம் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை முறையான பதில்விளக்கம் வெளியாகவில்லை. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மரிய வில்சன் நிதியமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தப் பழைய சர்ச்சை அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஒரு அமைச்சருக்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை அல்லது விளக்கம் வருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    செங்கோட்டையன் பதவி மாற்றம்

    முன்னதாக மே 16 அன்று வெளியான அறிவிப்பில் செங்கோட்டையனுக்கு நிதித்துறை (Finance Portfolio) ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது நிதித்துறை மாற்றப்பட்டு, அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வழங்கப்பட்டுள்ளது. இப்பதவி உடன் இதர கூடுதல் பொறுப்புகளான வருவாய் நிர்வாகம், மாவட்ட வருவாய் நிர்வாக அமைப்பு, துணை ஆட்சியர்கள், பூதான் மற்றும் கிராமதான் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் (Legislative Assembly affairs) ஆகியவற்றையும் அவர் கவனிப்பார்.

    Advertisement

    செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை தற்போது புதிய அமைச்சரான மரிய வில்சனிடம் (Marie Wilson) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    English Summary

    DMK’s IT Wing has launched a sharp attack on newly sworn-in Finance Minister Maria Wilson, resurfacing old videos of an alleged family dispute where she is accused of house intrusion and assault. The controversy has erupted just hours after Maria Wilson took oath as Minister in Chief Minister Vijay’s first coalition cabinet. தமிழ்நாட்டின் புதிய நிதியமைச்சர் மரிய வில்சன் மீது திமுக ஐடி விங் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. சொந்த சகோதரர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாகக் கூறப்படும் பழைய காணொளிகளை மீண்டும் வெளியிட்டு விஜய் அமைச்சரவையை விமர்சித்துள்ளது.