ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா? இவ்வளவு பச்சையாவா மாட்டுவது? - திமுக ஐடி விங் அட்டாக்!

  • சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல பேருந்துகள் பற்றாக்குறையால் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், கூட்டமே இல்லை என பலர் நேற்று ரீல்ஸ் வெளியிட்டனர். இந்நிலையில், "விடுமுறை முடியும் நாளுக்கு முன்பு ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா? வாங்கிய காசுக்கு இவ்வளவு பச்சையாகவா குரைத்து மாட்டுவது?" என திமுக ஐடி விங் காட்டமாக விமர்சித்துள்ளது.

    Advertisement

    விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, 3 நாட்கள் தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், போதிய பேருந்துகள் கிடைக்காமல் ஏராளமானோர் குடும்பத்துடன் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    Advertisement

    கிளாம்பாக்கத்தில் நெரிசல்

    முன்பதிவு செய்த பயணிகளின் பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக கூறிய போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மாற்று பேருந்துகளையும் இயக்காமல் அலைக்கழித்ததாக பயணிகள் குற்றம்சாட்டினர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்துகள் பற்றாக்குறையைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

    பண்டிகை காலங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், பேருந்து நிலையங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படுகிறதா? ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரடியாக களத்தில் ஆய்வு செய்யவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

    Advertisement

    கூட்டமே இல்லை என ரீல்ஸ்

    இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் கூட்டமே இல்லை என்றும், பேருந்துக்காக யாரும் காத்திருக்கவில்லை என்றும் இயல்பாக இருப்பதாகவும் தவெக ஆதரவாளர்கள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். வெள்ளிக்கிழமை புகார்கள் எழுந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

    திமுக ஐடி விங் அட்டாக்

    இந்நிலையில், இதுகுறித்து திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது. திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "எச்சிலைப் பிழைப்பு பிழைக்கும் இன்ஸ்டா வாடகை வாய்கள் மற்றும் தவெக தற்குறிகளே!

    லாங் வீக்கெண்டுக்காக கடந்த வியாழன், வெள்ளியன்று ஊருக்குப் போக முடியாமல் கிளாம்பாக்கத்தில் மக்கள் நடுத்தெருவில் கதறினார்கள். அரசுப் பேருந்துகள் இல்லாததால், ஆம்னி பேருந்துகளில் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை அப்பட்டமான பகல் கொள்ளை!

    Advertisement

    இதைச் சரிசெய்ய வக்கற்ற தவெக அரசு, "இது திமுக சதி" என மடைமாற்ற, காசுக்கு வாந்தியெடுக்கும் இன்ஸ்டா கோமாளிகளை 'ஞாயிற்றுக்கிழமை' இரவு கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி "கூட்டமே இல்லை, பஸ் ஃப்ரீயா இருக்கு" என Reels போட வைத்துள்ளது!

    இவ்வளவு பச்சையாகவா?

    ஏண்டா மூளை மழுங்கிய தற்குறிகளா! உங்கள் 'டம்மி' முதலமைச்சரைப் போலவே மண்டையில் களிமண்ணா? விடுமுறை முடியும் நாளுக்கு முன்பு ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா? வாங்கிய காசுக்கு இவ்வளவு பச்சையாகவா குரைத்து மாட்டுவது?

    "தவறு நடந்துவிட்டது, உடனே சரிசெய்கிறோம்" எனச் சொல்லும் நிர்வாகத் திறமையோ, துணிச்சலோ இந்த ரீல்ஸ் முதலமைச்சருக்கு என்றைக்கும் வராது.

    Advertisement

    மக்களின் நிஜமான கண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய கோமாளிகளை வைத்துக் கொச்சைப்படுத்துவது மட்டும்தான் தவெக-வின் ஈனத்தனமான மாற்று அரசியல்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    While overcrowding occurred at the Kilambakkam bus terminus due to a shortage of buses bound for out-of-town destinations, many people posted Reels claiming there was no crowd at all. In response, the DMK IT Wing sharply criticized this, asking, "Would anyone travel back to their hometown just before the holidays end?"