Instagram, Chat Gpt எல்லாமே தப்பு.. பகுத்தறிவு தான் முக்கியம்.. கிளாஸ் எடுத்த கனிமொழி

  • கோவை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. விஜய் முதலமைச்சராகியுள்ளார். இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி தவெக வெற்றி பெற்றுவிட்டது என்று திமுக, அதிமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமை நம்ப கூடாது. சாட் ஜிபிடியும் தவறான தகவல் சொல்கிறது. மக்கள் பகுத்தறிவுடன் செய்லபடுவது தான் முக்கியம் என்று திமுக கனிமொழி கிளாஸ் எடுத்துள்ளார்.

    Advertisement

    கோவை பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "50 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு சுயமரியாதை திருமணம் சாத்தியமில்லை. ஆண் படித்திருந்தாலும், மணப்பெண் படித்திருக்கும் வாய்ப்பில்லை. இன்று யார் என்ன தொழிலை செய்ய வேண்டும் என முடிவு செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    Advertisement

    இந்த நிலை உருவாக பெரியாரும், திராவிட இயக்க முன்னோடிகளும் எவ்வளவு முயற்சி எடுத்தார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தந்தை பெரியாரின் பெயரைச் சொன்னாலே இன்றும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. பெரியாரை பற்றி படித்து பின்னர் புரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால் இன்றைக்கு இன்ஸ்டாகிராம் நம்பக்கூடாது. இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

    இன்ஸ்டாகிராம் மீது விமர்சனம்

    முதல் பெண் அமைச்சர் என தொடர்ந்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் சொல்பவர்கள் குறித்து ஆராய வேண்டும். இன்ஸ்டாவில் சொல்லும் தகவல்கள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகத்தான் பகுத்தறிவு வேண்டும் என பெரியார் அன்றே சொன்னார். இவ்வளவு பெரிய தோல்விக்கு பிறகும் திருமணம் நடத்தி இன்ஸ்டாகிராம் குறித்து பேசுவதாக விமர்சிக்கிறார்கள்.

    Advertisement

    தேர்தல் முடிவை தலை வணங்கி ஏற்கிறோம். ஆனால் மக்களுடன் எப்போதும் துணை நிற்போம். நமக்கு இன்ஸ்டாகிராம் சோசியல் மீடியா சொல்ல கூடிய செய்திகளாகட்டும், இன்றைக்கு சேட் ஜி.பி.டி கேள்வி கேட்டால் எல்லா நேரத்திலும் சொல்லப்படுகிறது. அங்கேயும் தவறான பதில்கள் வரப்படுகிறது. அதிகமாக கேள்வி கேட்டால் சாரி மன்னிக்கவும் எனக்கு தெரியாது என்று கூறுகிறது. இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு நமக்கு பகுத்தறிவு வேண்டும்.

    பகுத்தறிவு முக்கியம்

    அதைத் தான் தந்தை பெரியார் காலம், காலமாக சொன்னார். பேரறிஞர் அண்ணா அவரின் தேர்தல தோல்விக்கு பிறகு பட்டினத்தார் படத்தை பார்க்க சென்றாராம். அதனால் தேர்தல் என்பது மக்களுடைய முடிவு. அதே நேரத்தில் மணமக்கள் பெரியார் அவருடைய தந்தை பெரியார் திராவிட இயக்கத்திலே தன்னை இணைத்துக் கொண்டு இருக்கக் கூடியவர் பிள்ளைகளுக்கு நான் அதிகமாக எடுத்துச் சொல்லக்கூடிய அவசியம் இல்லை, யாருக்குமே எடுக்கக் கூடிய அவசியமில்லை.

    Advertisement

    இன்று எல்லா விஷயமும் உங்கள் கைகளில் இருக்கிறது. தந்தை பெரியார் அவர்களுடைய கனவாக இருக்கக் கூடிய ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்லக் கூடிய சமுதாயத்தை உருவாக்கக் கூடியவர்களாக பகுத்தறிவு மிக்க அடுத்த தலைமுறையை உருவாக்க கூடியவர்களாக இந்த மண் மீதும், மொழி மீது மாறாத, மீளாத பற்றை வைத்து இருக்கக் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க கூடியவர்களாக நீங்க வாழ வேண்டும்" என்றார்.

    English Summary

    DMK Kanimozhi: DMK Kanimozhi said, don’t trust Instagram. Even Chat Gpt giving wrong information. Rationality only guides you for good path.