ஆம்னி பஸ்களில் 8 மடங்கு கட்டண உயர்வு.. விசில் புரட்சி ஆட்சியில் பகிரங்க சுரண்டல்! கேஎன் நேரு அட்டாக்

  • சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அடிக்கும் பல மடங்கு கட்டண கொள்ளையை தடுக்காமல் தவெக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அரசுப் பேருந்துகளோடு ஒப்பிட்டால் இது 12 மடங்கு அதிகம் என்றும் சாடியுள்ளார்.

    Advertisement

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது.

    Advertisement

    இந்த விடுமுறையின் போது ஆம்னி பேருந்துகள் கட்டணம் 8 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுதபூஜை தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் அடிக்கும் பல மடங்கு கட்டணக் கொள்ளையை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது தவெக அரசு.

    பண்டிகைக் காலங்கள் என்றாலே, சாமானிய மக்களின் மகிழ்ச்சியை விட தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு தான் பெருமகிழ்ச்சியாக இருக்கிறது. ஆயுதபூஜை தொடர் விடுமுறையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்ட சாமானிய மக்களிடம் ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளையை தடுக்க முடியாமல் விஜய் அரசு திணறி கொண்டிருக்கிறது.

    Advertisement

    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திராவிட மாடல் ஆட்சியின் விடியல் பயணத்தை மாற்றி, விரிவாக்கம் செய்து வெற்றி பயணம் என ஸ்டிக்கர் ஒட்டி, ஆட்டோ டிரைவர்களையும், தனியார் பேருந்து உரிமையாளர்களையும் ஒரு பக்கத்தில் நட்டத்தில் விட்டு இன்னொரு பக்கம் பண்டிகை காலத்தில் சாமானிய மக்களிடம் இருந்து அறுவடை செய்ய வழியும் காட்டுகிறார்கள்.

    4 நாள் லீவு விட்டுட்டா போதும்.. சின்ராச கையில பிடிக்க முடியாது! தாறுமாறாக எகிறிய ஆம்னி பஸ் கட்டணம்!

    இதனையெல்லாம் முன்கூட்டியே கணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய விஜய் அரசு, ஸ்டிக்கர் ஒட்டுவதில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நிர்வாகம் என்றால் என்னவென்றே இவர்களுக்கு தெரியவில்லை. பண்டிகை காலங்களில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டண உயர்வு இருப்பதை கேள்விபட்டிருப்போம்.

    Advertisement

    ஆனால், இப்போது 8 மடங்கு கட்டண உயர்வு என்பதெல்லாம் விசில் புரட்சி ஆட்சியில்தான் பார்க்கிறோம். அரசுப் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிட்டால், இது 12 மடங்கு அதிகம். இந்த பகிரங்கமான சுரண்டலை இதுவரை தமிழ்நாடு பார்த்ததில்லை. மாதாந்திரச் சம்பளத்தை நம்பி வாழும் நடுத்தரக் குடும்பம், பண்டிகைக்கு ஊருக்குச் செல்லவே முடியாத நிலையே ஏற்படுத்திவிட்டார்கள்.

    எப்படியாவது ஊருக்கு போக வேண்டும் என நினைப்பவர்கள் தங்களின் ஒரு மாதச் சேமிப்பை இழந்துதான் போக வேண்டும். அப்படி பயணிப்பவர்கள் எல்லோரும் இந்த ஆட்சியை கழுவி ஊற்றுவதை கோயம்பேட்டிலும் ஆலந்தூரிலும் கிளாம்பாக்கத்திலும் போக்குவரத்துறை அமைச்சர் பார்த்தால் ஆயிரம் ரீல்ஸ் எடுக்கலாம்

    Advertisement

    அரசு நிர்ணயித்த கட்டணக் கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பண்டிகைக் காலத்தில் கொள்ளை அடிப்பவர்கள் மீது போக்குவரத்து துறை அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அரசு மோட்டார் வாகனச் சட்டங்களும், விதிகளும் யாருக்காக இருக்கின்றன? போக்குவரத்து துறை என ஒன்று செயல்படுகிறதா? கட்டண கொள்ளையை தெரிவிக்க 24 மணி நேர உதவி எண்ணை விளம்பரப்படுத்தினீர்களே.. அப்படி நடவடிக்கை எடுத்ததற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா?

    ஆயுதபூஜை! ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கட்டணக் கொள்ளை! துணை போகிறதா தவெக அரசு? திமுக ஐடி விங் கேள்வி

    மக்களின் பண்டிகை மகிழ்ச்சியை விலை பேசுவர்களுக்கு "கமிஷன் வாங்கிக்கொண்டு" தவெக அரசு துணை போகிறதா என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.விநாயகர் சதுர்த்தி விடுமுறையின் போது 'அரசு பஸ்கள் இல்லை. கட்டணக் கொள்ளை' என புகார்கள் கிளம்பியதும் அதை மறைக்க இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களை கிளம்பாக்கத்தில் ஒரே நேரத்தில் இறக்கிவிட்டு ரீல்ஸ்கள் போட்டீர்களே..

    Advertisement

    அது போல ஆயுதபூஜை விடுமுறையிலும் பிஆர் ஸ்டண்ட் நாடகம் நடத்த ஐடியா எதுவும் வைத்திருக்கிறீர்களா?தொடர் விடுமுறை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க, திராவிட மாடல் ஆட்சியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குதிரை பேரத்தில் காட்டும் வேகத்தை ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கு காட்டவில்லை. பஸ்சில் கேட்கும் விசில் சத்தம் எல்லாம் மக்களின் காதுகளில் நாராசமாகதான் ஒலிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    DMK KN Nehru Blasts Ruling TVK Over Unchecked Omni Bus Fare Hikes ahead of Pooja Holidays