சென்னை: அதிமுக செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதியாக அறியப்படும் தாராபுரம் தொகுதியில் வெற்றியை பெறப்போவது யார்? என்பது தொடர்பாக மாலைமலர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் ஆளும் தவெகவை திமுக முந்துவதாக தெரிவித்துள்ளது.
தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் தாராபுரத்தில் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்குப்பதிவு 9.36 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதனால், இந்த தொகுதியில் வெற்றி பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தனியார் நாளிதழான மாலைமலர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தாராபுரத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரியவந்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவின் படி, தவெகவை திமுக முந்தி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுமெனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்புப்படி பார்த்தால் தவெகவுக்கு தேர்தல் முடிவில் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது என்றே சொல்லலாம். மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை தவெக வேட்பாளர் வெற்றி பெறுவார் எனவும் இரண்டாவது இடத்தை பிடிப்பதில் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளில் பதிவான வாக்குகள் வரும் 9 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. தாரபுரம் தொகுதியில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவியது. தவெக சார்பில் கடந்த முறை அதிமுகவில் போட்டியிட்டு வென்றுவிட்டு பின்னர் ராஜினாமா செய்த சத்யபமாவே மீண்டும் நிறுத்தப்பட்டார். அதிமுக சார்பாக கே. பானுமதி என்பவரும், திமுக சார்பாக எஸ். சுகன்யா என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகாவும் நிறுத்தப்பட்டனர். இளைஞர்களின் பெரும் ஆதரவுடன், பெருத்த எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்த தவெக, மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு அரசியல் கட்சிகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, தவெக ஆட்சிக்கு வந்த பிறகு எங்கு பார்த்தாலும் மின்வெட்டு பிரச்சினை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என தவெக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இன்னொரு பக்கம், அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி வலுக்கட்டாயமாக இந்த தேர்தலை திணித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையெல்லாம் தாண்டி த்வெக வெல்லுமா? அல்லது அதிமுக, திமுக ஆகியவற்றில் ஏதேனும் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரக்கூடிய நிலையில், தவெகவை திமுக முந்தி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.திமுக வெற்றி பெற வாய்ப்பு
இடைத்தேர்தலில் விஜய் அலை இல்லை.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐடிபிஎஸ் கருத்துக்கணிப்பு
5 முனை போட்டி