சென்னை: திமுக அதிமுக என்கிற 50 வருட தமிழக அரசியல் தவெக திமுக என்று மாறியுள்ளது. சட்டமன்ற தேர்தல் தோல்வியால் திமுகவில் மாற்றங்களை ஏற்படுத்தி மேம்படுத்த அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் உதயநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் தவெக அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக வடக்கு மண்டல சட்டப்பிரிவு அணி ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் வருமாறு, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை அறுவறுக்கத்தக்க வகையில் விமர்சிப்போர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் பொய் புகாரில் உதயநிதியை கைது செய்கிறார்கள். கொளத்தூர் தொகுதி வாக்கு எண்ணும் இயந்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே வாக்கு இயந்திர முறைக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் செயல்படும் தவெக அரசை கண்டிக்கிறோம்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தவெக அரசுக்கு எதிராக தீர்மானம்
"எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தவெக அரசு தவறிவிட்டது. கோவை கல்லூரி மாணவர் அமுதன் போதை கும்பலால் கொலை செய்யப்பட்டதை கண்டிக்கிறோம்.