இந்த முறையும் பயிற்சி தானா? சீமான் கனவில் மண்ணை அள்ளிப் போட்ட திமுக! அம்பையில் உதிய சூரியன்!

  • சென்னை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் எப்படியாவது சட்டசபைக்குச் சென்று விடலாம் என கனவில் இருந்தார் நாதக அண்ணன் சீமான். ஆனால் அவர் கனவில் மண் விழுந்தது போல இந்த தேர்தலில் திமுக களமிறங்குவது உறுதி என்கின்றனர் உடன்பிறப்புகள். அதிமுகவும் தன் பங்குக்கு வேட்பாளரை களம் இறக்க உள்ளது. இதனால் வழக்கம் போல் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட போகிற சீமான் என்றனர்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. கூட்டணிகள் உடைந்ததோடு எம்எல்ஏக்கள் கட்சித் தாவிய சம்பவங்களும் அரங்கேறின. அப்படி அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தாவியவர்களில் ஒருவர் தான் இசக்கி சுப்பையா.

    Advertisement

    பெரும் தொழில் அதிபர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என பல்வேறு முகங்களை கொண்ட அவர் அம்பையின் செல்லப்பிள்ளை போலவே வளம் வந்தார். தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர். தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருக்கும் நிலையில், இடைத்தேர்தலிலும் அவரே போட்டியிடலாம் என உறுதியாக சொல்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

    சீமான்

    மறுபுறம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பை தொகுதியில் போட்டியிடுகிறேன். பசித்தவனுக்கு பிரியாணி கிடைத்தால் விடுவேனா என உற்சாகத்தில் இருக்கிறார். எப்படியாவது இந்த முறை வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்லலாம் என ஆசையோடு காத்துக் கொண்டிருக்கிறார்.

    Advertisement
    சாதி ஓட்டு.. எனக்கு தீட்டுனு சொன்னரே சீமான்! அம்பையில் ஏன் போட்டி? நாடார்+முக்குலதோர் பாலிடிக்ஸ்!

    பொது வேட்பாளர்

    திமுகவும் அதிமுகவும் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டால் பொது வேட்பாளர் என்ற ரீதியில் நாம் களமிறங்கலாம். இதனால் அதிமுக திமுக ஓட்டுகள் தனக்கு கிடைக்கும் என்பது சீமானின் எண்ணம். ஆனால் அவர் கனவில் மண்ணை அள்ளிப் போடுவது போல ஒரு தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் நெல்லை உடன்பிறப்புகள்..

    திமுக விமர்சனம்

    திமுக தலைவர் ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பலரையும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர் சீமான். மேலும் தனிப்பட்ட ரீதியாகவும் அவரது தாக்குதல் இருந்தது. கடந்த சட்ட சபை தேர்தலில் கூட திமுகவினரை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

    Advertisement
    காலைலயே தியேட்டரை திறப்பதா? வெட்கக்கேடு! சேயோன் பட நடிகரும் நாதக ஒருங்கிணைப்பாளருமான சீமான் காட்டம்

    இடைத் தேர்தல்

    மேலும் திமுகவின் சாட்டை துறைமுருகன், இடும்பவனம் கார்த்திக் ஆகியோரும் ஸ்டாலின் தரப்பை மிகக் கடுமையாக குறி வைத்து தாக்கினார். இந்த நிலையில் இடைத்தேர்தலில் எப்படி சீமானுக்கு ஆதரவு தருவது என உடன்பிறப்புகள் உதயநிதி ஸ்டாலினிடம் கொந்தளித்து பேசினார்களாம். மேலும் சட்டசபைக்குள் சீமான் வந்துவிட்டால் உதயநிதி ஸ்டாலின் முக்கியத்துவம் குறைந்துவிடும். சீமானோ ஆவேசமாக பேசக் கூடியவர். எப்படியும் லைம் லைட்டை தன் பக்கம் திருப்பிக் கொள்வார் எனவே சீமானுக்கு ஆதரவு தர வேண்டாம் என சொல்லிவிட்டார்கலாம்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம்

    மேலும் தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்ப்பதாக சொல்லிவிட்டு பொது வேட்பாளராக சீமானை நிறுத்தினார், அதிமுகவும் நாமும் கூட்டு சேர்ந்தோம் என முன்னர் வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் உண்மை என்பதுபோல ஆகிவிடும், எனவே எக்காரணத்தைக் கொண்டும் போட்டியிடும் முடிவிலிருந்து பின்வாங்க கூடாது என சொல்லிவிட்டார்களாம் உடன்பிறப்புகள்,

    சோப்ளாங்கி அரசு.. வாய் திறக்காமல் இருப்பது ஏன்? பயிர்க் கடன் தள்ளுபடி எப்போ? இறங்கி அடித்த உதயநிதி!

    உதயநிதி

    இது தொடர்பாக சீனியர் உடன்பிறப்புகளிடம் உதயநிதி பேசியபோது கடந்த தேர்தலில் விஜய் அலையையும் தாண்டி 29 சதவீத வாக்குகளை பெற்றது திமுக, தமிழக வெற்றி கழகமே அந்த தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு தான் தள்ளப்பட்டது, இப்படி திராவிட கட்சிகளின் கோட்டையாக இருக்கும் அம்பாசமுத்திரம் தொகுதி எதற்காக சீமானுக்கு விட்டு தர வேண்டும் என பல கேள்விகளை முன் வைத்ததாக சொல்லப்படுகிறது,.

    Advertisement

    ஸ்டாலின்

    இதை அடுத்து தீவிரமாக யோசித்த உதயநிதி ஸ்டாலின் இடைத்தேர்தலில் நிச்சயம் திமுக போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலினின் எண்ணமும் அதுதான் என்கின்றனர் உடன்பிறப்புகள். இதனால் இந்த தேர்தலிலும் சீமான் சட்டசபையில் செல்லப்போவதில்லை என்றும் சொல்கின்றனர்.

    English Summary

    Reports suggest DMK will field a candidate in Ambasamudram, ending speculation about backing Seeman as a common candidate.