திமுக தொண்டரை ரத்தம் சொட்ட சொட்ட அடித்த போலீஸ்.. உதயநிதி கைதின்போது நடந்த சம்பவம்

  • சென்னை: சென்னையில் உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட நடந்து சென்றார். அவரை திமுகவினர் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    Advertisement

    .

    சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று காலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் கிழக்கு போலீசார் கைது செய்தனர். வீட்டுக்குள் போலீசார் சென்ற நிலையில் அவரது கைதுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    Advertisement

    இருப்பினும் எதிர்ப்பையும் தாண்டி அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது நடவடிக்கைக்கு பிறகு போலீசார் உதயநிதி ஸ்டாலின் வெள்ளை நிற டெம்போ டிராவலர் போலீஸ் வாகனத்தில் ஏற்றி சாலை மார்க்கமாக தஞ்சாவூர் அழைத்து சென்றனர்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் இருந்த வாகனத்தை திமுகவினர் தடுத்து நிறுத்தினர். வாகனத்தின் முன்பு படுத்தும் தடையை ஏற்படுத்தியது. இதனால் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தி உதயநிதியை அங்கிருந்து அழைத்து சென்றனர். ஆனாலும் போலீஸ் வாகனத்தின் முன்பும், பின்பும் திமுகவினர் பேரணி போல் சென்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போலீசாருக்கும் எதிராகவும் கோஷமிட்டனர். முதல்வர் விஜய்க்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

    Advertisement

    இந்த சமயத்தில் திமுக தொண்டர் ஒருவர் முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட துடித்தார். அவரை திமுகவினர் அங்கிருந்து அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். காயம்பட்ட நபர் கூறும்போது, ''நான் உதய் அண்ணாவை பார்க்க வந்தோம். என்னை போலீசார் அடித்துவிட்டார்கள்'' என்று குற்றம்சாட்டினார். தற்போது அந்த நபர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்.

    English Summary

    Amidst the arrest of Udhayanidhi in Chennai, a man was seen walking with blood dripping from his face. After DMK members took him to the hospital, the injured man made a sensational allegation, stating, "We came to see Udhay Anna; the police beat me up."