பொதுமக்களை தாக்கும் திமுகவினர்.. வீடியோ வெளியிட்டு அமைச்சர் ராஜ்மோகன் போட்ட பதிவு

  • திருநெல்வேலி: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் சாலை மறியலில் திமுகவினர் ஈடுபட்டனர். அப்போது இடையில் வந்த இருசக்கர வாகன ஓட்டியை திமுகவினர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை ஷேர் செய்துள்ள கல்வி அமைச்சர் ராஜ்மோகன் சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    அமைச்சர் ராஜ்மோகன் வீடியோ உடன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது!

    Advertisement

    அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

    இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்..

    சட்டம் தன் கடமையை செய்யும்!" இவ்வாறு கூறியுள்ளார்.

    உதயநிதி ஸ்டாலினின் கைதைகண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பொய்வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி, திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன் உள்ளிட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 280-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    தவெக அரசின் கைது நடவடிக்கையை் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் மதுரை மாநகர திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தவெக அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    இதே போல் மதுரை புறநகர் திமுக சார்பில் ஒத்தக்கடை பகுதியில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒத்தக்கடை பகுதியில் திரண்ட திமுகவினர் தவெக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் முன்னாள் அமைச்சர் மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்..

    Advertisement

    இது குறித்து பேசிய திமுக நிர்வாகி ஜெயராமன் : எதோ ஒரு நடிகையை குறித்து. பேசியதற்கு இந்த அரசு இவ்வளவு கோபப்படுவது ஏன்? அமைச்சர் ஒருவர் ஜட்டியுடன் உட்காரவைப்பேன் என பேசினார். ஆனால் அவருக்கு பூ கொடுத்து வரவேற்கிறீர்கள் என்றார்.

    உதயநிதி கைதை கண்டித்து ஈரோடு காளை மாட்டு சிலை அருகே திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரி நீர் திசை திருப்பவே கைது நடவடிக்கை எடுத்துள்ளனர் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது மின்சார கட்டண உயர்வு உள்ளிட்டவைகளை மறைப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக கூறி உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது போட்ட வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    English Summary

    DMK members across Tamil Nadu are staging protests to condemn the arrest of Opposition Leader Udhayanidhi Stalin. As part of these protests, DMK cadres engaged in a road blockade in Tirunelveli. It is alleged that during the protest, they assaulted a two-wheeler rider who happened to be passing by. Education Minister Rajmohan shared the video of the incident and stated that the law would take its course.