ரூ.58 ஆயிரம் கோடி.. மின்சாரத் துறையில் நடந்த விஞ்ஞான ஊழல்.. அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!


  • சென்னை: கடந்த திமுக ஆட்சியில் நடந்த மின்சார கொள்முதலில் ரூ.58 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். மின்சாரத் துறை சார்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட்ட சிடிஆர் நிர்மல்குமார், ஊழலே வெளியே தெரியாத வகையில் விஞ்ஞான முறையில் தெளிவாக செய்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், மின்சாரத் துறைக்கான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் படி, மின்சார வாரியத்திற்கு தற்போது ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது. கட்டணங்கள் உயர்த்தப்படும் போது அதே அளவுக்கு செலவினங்களும் உயர்த்தப்படுகிறது. செலவினங்கள் அதிகரிக்கிறது தவிர கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவில்லை.

    Advertisement

    புதிய பணியாளர் தேர்வு மேற்கொள்ளப்படவில்லை. மின் வாரியத்தை குறுகிய கால ஒப்பந்தம் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. அதனை நீண்ட கால ஒப்பந்தமாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனாம் மாதம் ரூ.215 கோடி சேமிக்கப்படும்.

    நடப்பு ஆண்டிற்குள் 20 ஆயிரம் பேர் புதிதாக வேலைக்கு சேர்க்கப்படுவார்கள். 2021-26ல் நியமிக்கப்பட்ட 5 ஆயிரம் கேங்மேன்களும் பணிகளில் அமர்த்தப்படுவார்கள். ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்த எந்த ஆவணங்களும் பராமரிக்கப்படவில்லை. மின்வாரிய வரலாற்றிலேயே கடந்த ஆட்சிக் காலத்தில் தான் அதிக வருவாய் ஈட்டப்பட்டு, அதேநேரம் அதிக செலவிடம் நடந்திருக்கிறது.

    Advertisement

    கடந்த ஆட்சியில் மின் வாரியத்திற்கு கூடுதல் வருவாய் சுமார் ரூ.67 ஆயிரம் கோடி. ஆனால் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.1.24 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஆட்சியின் மின் வாரியத்தின் கடன் ரூ.87 ஆயிரம் கோடியாகும். இருந்தாலும் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டில் மின் கட்டண உயர்வு இருக்காது.

    தவெக ஆட்சி அமைக்கவில்லை என்றால், மின் வாரியம் தனியார்மயமாகி இருக்கும். மின் வாரியத்தை மேம்படுத்த வேண்டிய பணிகளில் ஈடுபடுவோம். டிரான்ஸ்பார்மர் மட்டுமல்லாமல் மின் கண்டக்டர் கொள்முதலிலும் முறைகேடு நடந்துள்ளது. 9 இடங்களில் மின் கண்டெக்டர் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது.

    Advertisement

    குறைந்த செலவிலான மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலமாக பற்றாக்குறையை சரி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் நடந்த மின்சார கொள்முதலில் ரூ.58 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. ஊழலே வெளியே தெரியாத வகையில் விஞ்ஞான முறையில் தெளிவாக செய்துள்ளனர்.

    English Summary

    DMK: Minister CTR Nirmalkumar Alleges Rs.58 Thousand Crore Electricity Scam by DMK Government