திமுகவினருக்கு முக்தி தரும் இடம் சிறை ஜாமினில் வெளியே வந்த எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சு!

  • நெல்லை: பாளையங்கோட்டை சிறைச்சாலை என்பது திமுகவினருக்கு முக்தி தருகிற இடம். எங்கள் தலைவர் இந்தி எதிர்ப்புக்காக இந்த சிறையில் இருந்துள்ளார். எங்களுக்கு சிறை என்பது புதிது கிடையாது. இருந்தாலும் இந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளை பறிக்கக்கூடிய அளவுக்கு சகோதரர் விஜய் ஆட்சி கடுமையான சட்டங்களை பயன்படுத்துகிறது என்று ஜாமீனில் சிறையில் இருந்து விடுதலையான திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசினார்

    Advertisement

    முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கதவை மூடினால் அவரது எலும்பை உடைப்பேன் என்று பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    Advertisement

    மார்க்கண்டேயன் பேச்சு

    இதையடுத்து, இன்று பிற்பகலில் பாளையங்கோட்டை சிறையில் இருந்து மார்க்கண்டேயன் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மார்க்கண்டேயன் கூறியதாவது:-

    சிறையில் அடைத்ததால் என்னுடைய கருத்துகளை மடக்கி விட முடியும். ஒடுக்கிவிட முடியும் என்று நினைத்தால் ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திப்பதற்கு திமுகவினர் தயாராக இருக்கிறார்கள். ஸ்டாலின் 5 ஆண்டு காலம் வரலாற்று சிறப்பு மிக்க ஆட்சியை கொடுத்தார்கள். இன்று 3 மாத காலத்திற்குள் தமிழ்நாடு மிகப்பெரிய அளவு வன்கொடுமை நடந்து கொண்டு இருக்கிறது. இன்று சட்டத்தை இயற்றக்கூடிய, சட்டத்தை பேசக்கூடிய கருத்துரிமைகளை பேசக்கூடிய எம்.எல்.ஏ எந்த வித காரணமும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

    Advertisement

    மிக கடுமையான எதிர்விளைவுகளை கொடுப்போம்

    ஆனால் நாட்டின் வீதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை, காவிரியில் தண்ணீர் இல்லாமல் விவசாய மக்களின் கஷ்டம் என நாடு முழுவதும் மூன்று மாத காலத்தில் அவலப்பட்டு கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் சுதந்திரத்திற்காக கடுமையான விளைவுகளை நம் தலைவர்கள் சிறையில் சந்தித்தனர். மிசா காலத்த்தில் சந்தித்தனர். இந்தி எதிர்ப்பில் சந்தித்தார்க்ள்.

    இப்போது ரீல்ஸ் ஆட்சியையும், சினிமா கொடுமையையும் கண்டித்து உண்மையாக ஜனநாயகம் மலர நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். சிறை கதவுகளின் கம்பிகள் எங்களை ஒடித்துவிட முடியாது. நாங்கள் நிமிர்ந்து நிற்கிறோம். நாளை சட்டமன்றம் கூடுகிறது. எங்களை இப்படி எல்லாம் அடக்கி ஒடுக்கிவிட்டால் சட்டமன்றத்தில் பேச மாட்டோம் என நினைக்கிறார்கள். மிக கடுமையான எதிர்விளைவுகளை நாங்கள் கொடுப்போம்.

    Advertisement

    சிறைச்சாலை முக்தி தரும் இடம்

    ஜனநாயக கடமையை திமுக ஆற்றும். திமுக தொண்டர்கள் வீறு கொண்டு இருக்கிறார்கள். ஸ்டீல் பாடி என்று சொன்னால் ஸ்டீலில் உடம்பு இருக்குமா.. சட்டமன்றத்தின் கதவை மூடுவேன் என்று முதல்வர் கூறுகிறார். ரீல்ஸ்ல முதல்வராக வந்துவிட்டார். ரியல் முதல்வராக இருக்கும் அளவுக்கு விஜய் பக்குவமாக பேசி கற்றுக்கொண்டால் எல்லாம் சரியாக இருக்கும். சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் கலந்து கொள்ளலாம். சிறையில் எத்தனை வருடம் இருந்தாலும் ஜனநாயகத்தை நாங்கள் காப்பாற்றுவோம். சிறைச்சாலை என்பது திமுகவிற்கு முக்தி தருகிற இடம்" என்றார்.

    English Summary

    DMK MLA Markandeyan: "Palayamkottai Prison is a place of liberation for DMK members; our leader was once imprisoned here for opposing Hindi. Prison is nothing new to us. However, the administration is employing harsh laws to the extent of stripping away the country's democratic rights," said DMK MLA Markandeyan after being released from prison on bail.