சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பான ரூ.100 கோடி ஊழல் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டார். அன்பில் மகேஷ் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் தவெக ஆட்சி எல்லை மீறி சென்று கொண்டிருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும் இந்த ஆட்சி நீதிமன்றத்தையும் மதிப்பது இல்லை. சட்டத்தையும் மதிப்பது இல்லை எனவும், நீதிமன்றத்தில் நீதிபதியும், வழக்கறிஞர்களும் காத்து இருக்கும் போது, சுற்றி சுற்றி வந்து மீண்டும் கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். உள்ளே என்ன நடக்கிறது எனவும் தெரியவில்லை என்றார்.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சேகர் பாபு வருகை தந்தார். இதையடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டபோதும் அங்கும் சேகர்பாபு வந்தார். பின்னர் மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அன்பில் மகேஷ் அழைத்து வரப்பட்டார். அப்போது காவல் ஆணையரக அலுவலகத்திற்குள் சேகர்பாபு உள்ளிட்டோருக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் எங்களை உள்ளே விடுமாறு போலீசாரிடம் சேகர்பாபு வாக்குவாதம் செய்தார். எனினும் போலீசார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கமிஷனர் அலுவலகம் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சேகர் பாபு கூறியதாவது:- முன் ஜாமீன் மறுக்கப்பட்ட உடன், உடனடியாக கைது நடவடிக்கையில் இறங்குகிறார்கள். மீண்டும் அலைக்கழிக்கிறார்கள். நீதிபதி அவர்கள், நீதிமன்றத்தில் காத்துக்கொண்டு இருக்கிறார். நீதிமன்றத்திற்கு அழைத்துக்கொண்டு வருவது போல வந்து சுற்றி சுற்றி வந்து மீண்டும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த ஆட்சி நீதிமன்றத்தையும் மதிப்பது இல்லை. சட்டத்தையும் மதிப்பது இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. யாரையும் காவல்துறை அனுமதிக்கவில்லை. இந்த ஆட்சி எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த அடக்குமுறைகளை கடந்துதான் திமுக 78 ஆண்டுகளை கடந்து இருக்கிறது. ஆகவே, இதுபோன்ற அடக்குமுறை தொடருமானால் எவ்வளவு தூரம் தொடர்ந்தாலும் அதை சட்டப்படி சந்திப்பதற்கு திமுக களத்தில் நிற்கும். முதலில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகு நேராக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதாகத்தான் வண்டியை எடுத்தார்கள். நீதிமன்றத்தில் நீதிபதியும் காத்திருக்கிறார். வழக்கறிஞர்களும் காத்து இருக்கிறார்கள். சுற்றி சுற்றி வந்து மீண்டும் கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஏற்கனவே விசாரித்து முடித்த பிறகு, நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதுதான் வாடிக்கை. வேண்டும் என்று அலைக்கழிப்பதற்காக சுற்றி சுற்றி கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் கலைஞர் பாணியில் சொன்னால் நீதி வெல்லும். அறம் வெல்லும். காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. அன்பி மகேஷ் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அவர் தாத்தா காலத்தில் இருந்து அப்பா காலத்தில் இருந்து அரசியலில் பயணிப்பவர். அவர் எங்கும் ஓடி ஒளிந்துவிட மாட்டார். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதன்பிறகும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்லாமல் என்ன பெயர் வைப்பது.." என்று கூறினார்.சேகர்பாபு பேட்டி
சுற்றி சுற்றி வந்து
திருமாவளவன் மேல நல்ல மரியாதை இருக்கு.. ஆனா இப்போ! ட்விஸ்ட் வைத்துப் பேசிய திமுக மாஜி சேகர் பாபு!
உள்ளே என்ன நடக்கிறது என தெரியவில்லை
கோட்டை விட்ட மாநகராட்சி.. மூழ்கும் நிலையில் HRCE ஆபீஸ்! யார் பொறுப்பு.. பாயிண்டோடு வந்த சேகர் பாபு!
ஓடி ஒளிந்துவிட மாட்டார்