சட்டென களத்தில் குதித்த திமுக.. உச்சநீதிமன்றத்தில் அவசர மனு! கர்நாடகா விஷயத்தில் ஷார்ப் மூவ்!

  • சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், நீர் ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியும் தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை இன்னும் கர்நாடாக கொடுக்கவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திமுக உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை தாக்கல் செய்திருக்கிறது.

    Advertisement

    இந்த விஷயத்தில் இனியும் கர்நாடகாவின் பேச்சை கேட்டு பொறுமையாக இருந்தால் கதை நடக்காது என்று நீதிமன்றத்தை திமுக நாடியிருக்கிறது. சொல்லப்போனால் தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசுதான் இதை செய்ய வேண்டும். ஆனால், திமுக களத்தில் இறங்கியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    கர்நாடக அரசு காவிரியில் நீர் திறக்காததால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் முற்றிலுமாக வறட்சியில் சிக்கியிருக்கின்றன. இந்த ஆண்டு குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே உடனடியாக தண்ணீர் திறந்துவிட தமிழகம் கோரிக்கை வைத்தது. ஆனால், எங்க அணையில் போதுமான நீர் இல்லை என்று கூறி.. அணையை திறக்க கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது.

    சட்டப்பூர்வ அமைப்புகளின் உத்தரவு

    முன்னதாக கடந்த மாதம் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு 4.5 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு குழு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து நீர் மேலாண்மை ஆணையத்திடம் சென்றது கர்நாடகா.. அங்கும், தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை கொடுக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது. இருந்தும் கூட.. இன்று வரை நீர் திறக்காமல் இருக்கிறது கர்நாடகா.

    Advertisement

    இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படி இருக்கையில்தான் திமுக உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அவசர மனுவை தாக்கல் செய்திருக்கிறது.

    மனுவில், கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றின் உத்தரவுகளையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை என்றும், இதனை உடனடியாக பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

    English Summary

    DMK: Despite orders from the Cauvery Water Management Authority and directives from the Water Regulation Committee, Karnataka has not yet released the water due to Tamil Nadu. Against this backdrop, the DMK has filed an urgent petition in the Supreme Court regarding this issue.