அறிவாலயத்தை வாடகைக்கு விடுவதா? காரில் தேசியக் கொடி வந்துவிட்டால் சில... நிர்மலை விமர்சித்த ஆ.ராசா

  • சென்னை: என்னாது அறிவாலயத்திற்கு வெள்ளையடித்து வாடகைக்கு விட வேண்டுமா? காரில் தேசியக் கொடி வந்துவிட்டால் சிலர் இப்படித்தான் பேசுவார்கள் என அமைச்சர் நிர்மல் குமாரின் பெயரை குறிப்பிடாமல் திமுக எம்பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் எம்.பி.ராசா பேசுகையில், அமைச்சர் நிர்மல் குமாரின் பெயரை சொல்லாமல் கண்டித்தார். அவர் கூறியிருப்பதாவது: இன்றைக்கு சிலருக்கு (சில என்பதற்கு பக்கத்தில் கடுமையான ஒரு வார்த்தையை ராசா பயன்படுத்தியிருந்தார்) காரில் தேசியக் கொடி வந்துவிட்ட காரணத்தினால் அறிவாலயத்திற்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடலாம் என சில அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் அரசியலில் கிரகப்பிரவேசம் நடத்திய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு வெள்ளையடித்து கொண்டனர். அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு பல முறை வெள்ளையடித்துக் கொண்டார்கள். தமிழ்நாடும் தனக்கு வெள்ளை அடித்துக் கொண்டது.

    எனவே அந்த அறிவாலயத்தை குறை சொல்லும் ஒரு கூட்டம் இன்று தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் இந்த கூட்டத்தை ஓட்டுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுப்போம். இவ்வாறு ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

    மதுரை மாவட்டத்தில் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசுகையில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தீயசக்தியான திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என கூறினார்கள். அதற்காகவே எம்ஜிஆர் கட்சி தொடங்கினார். ஆனால் தற்போது திமுகவை விஜய் முற்றிலும் ஒழித்துவிட்டார்.

    Advertisement

    இனி அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விட்டுவிட்டு வேறு வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். எனவே இனி நாம் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம். இவ்வாறு நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுவரை ஆ.ராசா பல முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நிர்மல் குமாரின் பெயரை சொல்லாவிட்டாலும் காரில் தேசியக் கொடி என்றாலே அவர் அமைச்சர் என்றுதான் அர்த்தம். அவரை அவதூறாக பேசியுள்ளது தவெகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கூட, முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் தாயை இழிவுப்படுத்தி பேசிய நிலையில் அதற்கு ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டித்ததால் ஆ.ராசா, எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.

    Advertisement

    அது போல் தவெக அரசுக்கு விசிக, கம்யூனிஸ்ட்கள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தந்ததற்கு பெண்களை கேவலமாக பேசும் சொல்லை குறிப்பிட்டு ஆ.ராசா விமர்சித்திருந்தார். இதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

    English Summary

    DMK MP A.Raja slams Nirmal kumar without naming for his comment on renting out Arivalayam. A.Raja used derogatory word against Nirmal Kumar.