எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. அடுத்து இதுதான் நடக்கும்! இடைத்தேர்தலில் திரிஷா.. திமுக எம்பி பகீர்!

  • சென்னை: எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சை பேச்சு மற்றும் அதனைத் தொடர்ந்து அரங்கேறிய கைது நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    இந்த நிலையில், "உதயநிதி ஸ்டாலின் அந்த நடிகையின் பெயரைக் கூடக் குறிப்பிடவில்லை, ஆனால் அரசியல் சுயலாபத்திற்காக வீடியோ வெட்டி ஒட்டப்பட்டுப் பரப்பப்படுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் (MP) எம்.எம். அப்துல்லா, இதற்குப் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய அரசியல் திரைக்கதையை அம்பலப்படுத்திப் பதிவிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.

    Advertisement

    வீடியோவை வெட்டி ஒட்டி பரப்புகிறார்கள்!

    தஞ்சாவூர் காவிரி போராட்ட மேடையில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையைக் சுட்டிக்காட்டிப் பதிவிட்டுள்ள எம்பி அப்துல்லா, உதயநிதி தனது உரையில் எந்தவொரு நடிகையின் பெயரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவே இல்லை. ஆனால், ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு அந்த வீடியோவின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் எடிட் செய்து, வெட்டி ஒட்டி சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் என்று சாடியுள்ளார்.

    மேலும், எதற்காக இவ்வளவு அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல்துறை மூலம் கைது நடவடிக்கை வரை நாடகம் ஆடப்படுகிறது என்பதற்கான பின்னணி காரணங்களையும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 3 முக்கியக் காட்சிகளாக விவரித்துள்ளார்.

    Advertisement

    எம்பி அப்துல்லா கணிக்கும் 3 முக்கியக் காட்சிகள்

    காட்சி 1: அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - நடிகையின் பேட்டி

    விரைவில் அந்த குறிப்பிட்ட நடிகை ஊடகங்களின் முன் தோன்றி அல்லது ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடுவார். அதில் 'எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவை இல்லாமல் என்னை ஒரு பெண் என்றும் பாராமல் மானபங்கப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுத்து என் மானத்தைக் காத்த முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி' என்று பேசுவார் அல்லது அறிக்கை விடுவார்."*

    காட்சி 2: இடைத்தேர்தலில் வேட்பாளராகக் களம் இறக்கல்

    Advertisement

    இந்த சர்ச்சை மற்றும் பரபரப்பை சாக்காக வைத்து, விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அந்த நடிகை தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தப்படுவார். அனுதாப அலை மற்றும் ஆளுங்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற வைக்கப்படுவார்.

    காட்சி 3: கட்சியின் தலைவியாக முன்னிலைப்படுத்துதல்!

    தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அந்த நடிகை கட்சியின் இரண்டாம் கட்ட தலைவராகவும், பிற்காலத்தில் கட்சியின் மிக முக்கியத் தலைவியாகவும் கட்சிக்குள் முன்னிலைப்படுத்தப்படுவார்.

    "தற்குறி தொண்டர்களும்... மங்குனி அமைச்சர்களும்

    தொடர்ந்து தனது பதிவில் ஆளுங்கட்சியையும் அதன் நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்துள்ள திமுக எம்பி அப்துல்லா, அந்த நடிகர அந்த நடிகையைத் தனது கட்சியில் கொண்டு வந்து சேர்த்து முன்னிலைப்படுத்தினால், அவரது தற்குறி தொண்டர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை. அவரது மங்குனி அமைச்சர்களும் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா தான் இருப்பார்கள். அதைச் செய்வதற்கு எதற்கு இத்தனை டிராமா? எதற்கு உதயநிதியின் மேல் வீண் பழி? என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    அரசியல் களத்தில் புதிய புயல்

    திமுக எம்பி அப்துல்லா வெளியிட்டுள்ள இந்தத் பதிவு, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கையை மறைக்கவும், அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவுமே திமுகவினர் இதுபோன்ற கற்பனைக் கதைகளைப் பரப்பி வருவதாக விஜய் ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதில் இருந்தே அரங்கேறி வரும் சம்பவங்கள் அனைத்தும் ஒரு திட்டமிட்ட அரசியல் திரைக்கதையின் பகுதியே என்பதை எம்பி அப்துல்லாவின் இந்த பதிவு சுட்டிக்காட்டுவதாகக் கூறி, திமுக தொண்டர்கள் இதனைச் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

    English Summary

    DMK MP Abdulla Exposes Alleged Political Plot Behind Udhayanidhi Arrest Row