சென்னை: திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார். இதுவரை அரசியல் களம், நாடாளுமன்றம் மற்றும் அரசு ஆவணங்களில் "கனிமொழி கருணாநிதி" என்று அறியப்பட்டு வந்த அவர், தற்போது தனது தாயார் ராஜாத்தி அம்மாளின் பெயரையும் தனது பெயருடன் முறைப்படி இணைத்துக் கொண்டுள்ளார்.
இதன்படி அவரது பெயர் இனி அரசு ஆவணங்கள் மற்றும் அரசியல் மேடைகளில் "கனிமொழி ராஜாத்தி கருணாநிதி" என்று அழைக்கப்படும். தந்தையின் பெயருடன் தாயின் பெயரையும் இணைத்து அவர் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு தமிழக அரசியல் களத்திலும் பொதுவெளியிலும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒருவர் தனது பெயரை முறைப்படி மாற்ற வேண்டும் என்றால், அதனைச் சட்டரீதியாக அரசு இதழில் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில், கனிமொழி தனது பெயர் மாற்றத்திற்கான அனைத்துச் சட்ட நடைமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளார். 1968-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி பிறந்த கனிமொழி கருணாநிதி, இனி "கனிமொழி ராஜாத்தி கருணாநிதி" என்றே அழைக்கப்படுவார் எனத் தெரிவித்து, இந்த பெயர் மாற்றம் தமிழ்நாடு அரசிதழில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இணையதளத்திலும் அவரது விவரக் குறிப்பில் இந்தப் புதிய பெயர் மாற்றம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இலக்கியவாதி முதல் நாடாளுமன்றக் குழுத் தலைவர் வரை: கனிமொழியின் பயணம் அரசியலுக்குள் நேரடியாக வருவதற்கு முன்பு, கனிமொழி அவர்கள் கவிதை, இலக்கியம், இதழியல் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். அப்போது இலக்கிய வட்டாரங்களிலும் புத்தகங்களிலும் "கனிமொழி" என்ற ஒற்றைப் பெயரிலேயே பரவலாக அறியப்பட்டார். அதன் பின்னர், தீவிர அரசியலில் களம் இறங்கியபோது, முன்னாள் முதல்வரும் தனது தந்தையுமான மறைந்த கலைஞர் மு. கருணாநிதியின் பெயரைத் தன்னோடு இணைத்து "கனிமொழி கருணாநிதி" என்று பயன்படுத்தத் தொடங்கினார். 2007 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார். 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டுப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கமாக நமது சமூகத்தில் பலரும் தந்தை பெயரை மட்டுமே தங்களது பெயரின் பின்னாலோ அல்லது முன்னாலோ முதலெழுத்தாகப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், தாயின் பெயரையும் பிள்ளைகள் தங்கள் பெயரோடு பெருமையோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற முற்போக்கான சிந்தனை தமிழ்நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. கனிமொழி தனது தாயார் ராஜாத்தி அம்மாளின் பெயரைத் தனது பெயரின் நடுவில் இணைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே திட்டமிட்டிருந்ததாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது தாய் நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போதே இந்த மாற்றத்தைச் செய்து அவரிடம் காட்ட வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார். அரசிதழில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தகவலை அறிந்தபோது அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அரசியல் மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே பெயர் கொண்டவர்கள் பேசும் கருத்துகள் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விவாதங்களை ஏற்படுத்துவது உண்டு. அண்மைக் காலங்களில் சில கருத்துகள் யார் கூறியது என்ற குழப்பங்கள் பொதுவெளியில் எழுந்தன. தற்போது தனது தாயாரின் பெயரை நடுவில் இணைத்து "கனிமொழி ராஜாத்தி கருணாநிதி" என்று அதிகாரப்பூர்வமாக மாற்றியிருப்பது, ஆவண ரீதியாகவும் பொதுவாழ்விலும் அவருக்கான தனித்துவமான அடையாளத்தை எந்தக் குழப்பமும் இன்றி உறுதிப்படுத்தியுள்ளது. பெற்றெடுத்த தாய்க்கு உரிய முக்கியத்துவமும் அங்கீகாரமும் தரும் வகையில் கனிமொழி எடுத்துள்ள இந்த முடிவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். தந்தை கருணாநிதி மற்றும் தாய் ராஜாத்தி அம்மாள் என இருவரின் பெயரையும் சமமாகத் தனது பெயரில் சுமந்து நிற்கும் கனிமொழியின் இந்த முன்னெடுப்பு, சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு ஒரு நல்ல முன்னுதாரணமாகப் பேசப்பட்டு வருகிறது.தமிழ்நாடு அரசிதழில் சட்டப்பூர்வ வெளியீடு
தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் தூத்துக்குடி தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெற்றார்.
அத்துடன், நாடாளுமன்ற மக்களவையில் திமுக குழுவின் தலைவராகவும் கனிமொழி முக்கியப் பொறுப்பு வகித்து வருகிறார்.பெயர் மாற்றத்தின் பின்னணி: தாய் மீதான பாசம்
குழப்பங்களைத் தவிர்க்க உதவும் அடையாளம்
சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டு