Kanimozhi: முதல்வர் விஜய் எனக்கு சொந்தக்காரர் ஆகிட்டாரு.. தவெகவை வெளுத்தெடுத்த கனிமொழி எம்பி

  • சென்னை: என்னுடைய அன்பு தம்பி விஜய்.. எனக்கு சொந்தக்காரர் ஆகிட்டாரு.. ஏனென்றால் அவர் என் அண்ணனை ஸ்வீட் அங்கிள் என்று சொல்கிறார். அதனால் அவரை நான் அன்பு தம்பி என சொல்வதில் தப்பு இல்லை தானே என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். அண்ணன் தளபதி சொல்வது போல் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் தான் போட்டியே என்றும், மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஏமாற்றம் தான் மக்கள் அடைந்துள்ளனர் என தவெக ஆட்சியை விமர்சித்தார்.

    Advertisement

    தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய், முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை அங்கிள் என சொல்லி வருகிறார். தேர்தலுக்கு முன்பு பிரசாரத்திலும் ஸ்டாலின் அங்கிள் என விமர்சித்து வந்த நிலையில் தற்போது முதல்வர் ஆன பிறகும் மு.க ஸ்டாலின அங்கிள் என பேசி வருகிறார். மதுராந்தகத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது மு.க ஸ்டாலின் எனக்கு ஸ்வீட் அங்கிள் என விமர்சித்து இருந்தார். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி விஜய் என் அன்பு தம்பி என பேசியுள்ளார்.

    Advertisement

    எல்லாத்தையும் மாத்திடுவேன் என சொன்னாங்க

    பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார். முன்பு எதுவுமே சரியில்லை என சொல்லி ஓட்டு கேட்டார். நான் ஆட்சிக்கு வந்தால் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்னு சொன்னார். திரைப்படங்களில் ஒரே நாளில் எல்லாத்தையும் மாத்தி காட்டுவாங்க இல்லையா அப்படி, நிஜத்திலும் எல்லாத்தையும் மாற்றி காட்டுவேன்னு சொன்னார்கள். இப்போ ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், எதை மாற்றி இருக்கிறார்கள்.

    சாயங்காலம் கரண்ட் கட் ஆகுதா.. தினமும் கட் ஆகுதா.. காலையிலும் கரண்ட் கட்.. மாலையிலும் 3 முறை கரண்ட் கட்.. அந்த நேரத்தில் சகோதரிகள் அவங்க கிட்ட கேளுங்க.. முன்னாடி திமுக ஆட்சியில் கரண்ட் கட் ஆச்சா என்று கேளுங்கள். இப்போ கரண்ட் கட் ஆனாலும் வெளியே வந்து உட்கார முடியல. வீட்டில் இருக்கும் சகோதரிகள், பெண்கள் வெளியில் வந்து உட்கார பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் தவெக ஆட்சியில் சீர்கெட்டு கிடக்கு.

    Advertisement

    விஜய் எனக்கு சொந்தக்காரர் ஆகிட்டாரு

    தமிழக முதல்வர் விஜய் எனக்கு இப்போது எனக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். அன்பு தம்பி விஜய்.. ஏனென்றால் என் அண்ணன் மு.க ஸ்டாலினை ஸ்வீட் அங்கிள் என கூப்பிடுகிறார். அப்போ நான் அன்பு தம்பி என்று கூப்பிடுவதில் தவறில்லை தானே.. தம்பி விஜய் அவர்கள் ஆட்சியில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து இருக்க பயப்படுகிறார்கள். கரண்ட் இல்லை என்றால் இருட்டில் புழுக்கம் ஏற்படும். ஆனால் காற்று இல்லாமல் புழுக்கத்தை கூட தாங்கிக்கொள்ளலாம் வெளியில் மட்டும் செல்ல வேண்டாம் என சொல்லி உள்ளேயே இருந்து விடுகிறார்கள். ஆட்சிக்கு வந்து 4 மாதத்தில் இதெல்லாம் நடக்கிறது.

    Advertisement

    4 மாதத்தில் 550 குற்றங்கள்

    ஆட்சிக்கு வந்து 4 மாதத்தில் கிட்டத்தட்ட 550 குற்றச் சம்பவங்கள் நடந்து இருக்கு. நம் அண்ணன் தளபதி சொல்வது போல மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் தான் போட்டியே.. வேறு எதுக்கும் போட்டியில்லை. 550 குற்ற சம்பவங்கள். கிட்டத்தட்ட 200-க்கு மேற்பட்ட கொலைகள்.. 300-க்கும் அதிகமான பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள். 8 காவல் மரணங்கள்.. காவல்துறைக்கு அமைச்சர், முதல்வர் விஜய்.. ஆணவக் கொலைகள் 10க்கு மேல்.. இது தான் இவர்கள் கொண்டு வந்து இருக்கின்ற மாற்றம். மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஏமாற்றம் தான் மக்கள் அடைந்துள்ளனர்" என்று கூறினார்.

    English Summary

    Kanimozhi: "My dear younger brother Vijay has become a relative of mine, because he calls my elder brother 'Sweet Uncle'," said DMK MP Kanimozhi. Echoing her brother Thalapathy's words, she remarked that the real competition is between power cuts and sickle attacks, and criticized the TVK administration, stating that people have faced only disappointment despite promises of change.