சிடிஆர் நிர்மல் குமார் பேசிய கொஞ்ச நேரத்துல நடந்த ட்விஸ்ட்.. பரந்தாமனை வேட்பாளராக்கிய திமுக!

  • சென்னை: தவெக ஆட்சிக்கு எதிராக திமுக சார்பில் கடுமையான எதிர்வினைகளை ஆற்றி வருகிறார் பரந்தாமன். பரந்தாமனின் நிலை கட்சியில் மோசமாக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் இன்று விமர்சித்த சிறிது நேரத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் தொகுதியின் வேட்பாளராக பரந்தாமனை திமுக தலைமை அறிவித்துள்ளது.

    Advertisement

    சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், செய்தியாளர் சந்திப்பில் காட்டமாக எதிர்வினை ஆற்றி இருந்தார். "எதிர்கட்சித் தலைவர் எழுப்பிய 15 கேள்விகளில் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாமல் தொடை நடுங்கி முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தை விட்டு ஓடிவிட்டார்.

    Advertisement

    மிசாவை பத்தி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது. ஒரு உடல் மொழி வேற காட்டுறார். மிசாவில் கைது செய்வது பல வழக்குகளில் கைது செய்வார்கள் என ஒரு அறிவு ஜீவியான சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசுகிறார். மிசா என்றால் என்ன தெரியுமா? இந்திரா காந்தி எமர்ஜென்சி டிக்ளேர் பண்ணும்போது மிசாவில் எல்லா அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். அதை எவ்வளவு கொச்சையா பேசுகிறார். டாய்லெட்ல எட்டிப் பார்க்கிறவர் தானே இந்த நிர்மல் குமார்.

    மிசா கைதியாக இருந்து துன்புறுத்தப்பட்டவர்கள் எல்லாம் அவர்கள் தாக்குதலுக்கு ஆளானதை விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில் கொண்ட ஒரு கமிஷன் கொடுத்த ரிப்போர்ட்ல மிகத் தெளிவா சொல்லி இருக்குது. ஓராண்டு காலம் மு.க.ஸ்டாலின் மிசா கைதியாக சிறைச் சாலையில் இருந்தார்." என்றார்.

    Advertisement

    மேலும், "அமைச்சர் நிர்மல் குமாருக்கு மிசா வேறு, குண்டாஸ் என்பது வேறு என்றே தெரியவில்லை. நான் சொல்லித் தருகிறேன். நிர்மல் குமார் பேசும் டோன் பிஜேபி, ஆர்எஸ்எஸ் டோன். மனநிலை சரியில்லாத அவரிடம் இருந்து அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்" எனக் கடுமையாக விமர்சித்தார் பரந்தாமன்.

    அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பற்றி பரந்தாமன் கடுமையாக விமர்சித்த நிலையில், அதுபற்றிய கேள்விக்கு இன்று பதில் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், "பாவம்.. அண்ணன் பரந்தாமன் நிலைமை ரொம்ப மோசமானது. அவர் எழும்பூர் எம்.எல்.ஏவாக இருந்தபோது அவரை அறிவாலயத்துக்குள்ளேயே விடவில்லை. மீண்டும் அவருக்கு சீட் கூட கொடுக்கவில்லை. இன்றைக்கு கட்சிக்கு பிரச்சனை வரும்போது மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

    Advertisement

    ஆட்சியில் இருந்தபோது பரந்தாமனுக்கு எம்.எல்.ஏ சீட் கூட தரவில்லை. அவர் எவ்வளவு கார்னர் செய்யப்பட்டார், அவர் பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எங்களுக்குத்தான் தெரியும். அவர் இப்போது சர்வைவலுக்காக பேசிக் கொண்டிருக்கிறார். அவரை பற்றி ஏன் பேசிக்கிட்டு?" எனக் கூறியிருந்தார்.

    அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் இப்படி பேசிய சிறுது நேரத்திலேயே இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் தொகுதியின் வேட்பாளராக பரந்தாமனை திமுக தலைமை அறிவித்துள்ளது. பரந்தாமனை திமுக தலைமை அவமதிக்கிறது என்கிற ரீதியில் சிடிஆர் நிர்மல்குமார் பேசிய சிறிது நேரத்திலேயே பரந்தாமன், வேட்பாளர் ஆக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சியில் சென்னை எழும்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் பரந்தாமன். திமுக சட்டத்துறை இணைச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார். நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமை பரந்தாமனுக்கு வாய்ப்பு தரவில்லை. அவருக்கு பதிலாக தமிழன் பிரசன்னாவை எழும்பூர் தொகுதியில் களமிறக்கியது. எழும்பூர் தொகுதியில் இருந்து வென்ற தவெகவின் ராஜ்மோகன் அமைச்சரானார்.

    தேர்தல் முடிவுகளுக்கு பின் தவெக ஆட்சிக்கு எதிராக திமுக சார்பில் கடுமையான எதிர்வினைகளை ஆற்றி வருகிறார் பரந்தாமன். குறிப்பாக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாருக்கு எதிராகவும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகவும் கடுமையாக பிரஸ் மீட்களில் பேசி வருகிறார்.

    Advertisement

    தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று கூட முதலமைச்சர் விஜய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில், அவருக்கு திமுக தலைமை இடைத்தேர்தலில் சீட் வழங்கியுள்ளது.

    English Summary

    Paranthaman has been voicing strong opposition to the TVK on behalf of the DMK. Shortly after Law Minister CTR Nirmal Kumar criticized Paranthaman, stating that his standing within the party was poor, the DMK leadership announced him as the candidate for the Maduranthakam constituency, where a by-election is set to take place.