சென்னை: "அரிசி விலை ஏறவே இல்லை என்று கூறும் மாண்புமிகு அமைச்சர், அரிசி வாங்கி சோறு தான் சாப்பிடுகிறாரா?.. அரிசி விலை உயரவில்லை என்ற்கிறார் அல்லவா, வாங்க மயிலாப்பூர் தொகுதிக்கே சென்று ஒவ்வொரு கடையிலும் போய் விசாரிக்கலாம்.. அப்படி உயர்ந்துவிட்டது என நான் நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா என திமுக பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.
மேலும், அவர் ஆடிட்டராக இருந்தவர். அவருக்கு எப்படி இந்த கஷ்டம் தெரியும். அரிசிக் கடைக்கு சென்று வாங்கும் சாதாரண ஏழை மக்களுக்கு தான் இது தெரியும். சிஎம் விஜய் சார் சீக்கிரமாக இதுக்கு ஒரு நடவடிக்கை எடுங்க என கூறியுள்ளார்.
திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டு முதல்வர் விஜய் சீக்கிரமாக ஆக்ஷன் மோடுக்கு வாங்க.. நீங்க ஸ்லீப் மோடில் இருக்கீங்க.. முதல்வர் தூக்கத்தில் இருந்து வெளியே வாங்க சிஎம்.. நீங்க இன்னும் பித்து பிடித்தது போலவே இருக்கீங்க.. நேற்று கூட நீங்க கனக துர்கா கோயிலுக்கு போனீங்க.. சந்திரபாபு நாயுடுவ சந்தித்தீர்கள்.. ஆனால் எங்காவது ஒரு போட்டாவில்கூட சிரித்த மாதிரி இருக்கீங்களா. இதில வேறு ஒரு டிவி ஸ்மைல் சிஎம் என போடுகிறார்கள். சேனலை இப்போது பிராண்ட் அம்பாசிட்ட ஆகிட்டாங்க போல சிஎம் விஜய்க்கு. நீங்க சிரிச்சா என்ன, சிரிக்காவிட்டால் என்ன?.. தமிழ்நாட்டு மக்களுக்கு வயிறு எரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் அழுதுகொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் இன்னைக்கு வந்து ஏண்டா இந்த அரசாங்கத்தை தேர்வு செய்தோம் என்று சொல்கிறார்கள். இதற்கு நான் சாட்சி. இப்போது தான் இடைத்தேர்தலின் போது மக்களை சந்தித்துவிட்டு வருகிறேன். கிராமப்புறம், குக் கிராம மக்களை அவங்க இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு வந்தேன். மக்கள் எங்கிட்ட சொன்னது எல்லாம் விலைவாசி அதிகமாகவிட்டது. நான் பிரசாரத்தில் அரிசி விலை ஏறிப்போய்விட்டது என்றால் அங்கிருந்து சர்க்கரை விலையும் கூடிட்டு என சொல்கிறாங்க. இன்னொருத்தர் காய்கறி விலை ஏறிவிட்டது என்கிறார். இப்படி மக்கள் அப்டேட்டாக இருக்கிறார்கள். ஆனால் நீங்க மக்களுடைய தேவைகளை பார்க்காமல், எதை பத்தியும் கவலைப்படமால் நீங்க வேறு ஒரு டிராக்கில் போய்க்கொண்டு இருக்கீங்க.. நாங்க எதோ பிரஸ்மீட் கொடுத்து திமுக இருப்பை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. மக்கள் பிரச்சினையை தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். திமுக எப்போதும் இருக்கும். உங்க கட்சி ஒருமுறை ஆட்சியில் இல்லாமல் போய்விட்டால் ஆளே இல்லாமல் போய்டுவீங்க.. மக்கள் பிரச்சினைக்காக நாங்க இருக்கோம். நிர்வாகம் தெரியாமல் சிக்கி தவிக்கிறீங்க.. தயவு செய்து சிஎம் சார், விலைவாசி விலை உயர்வை பத்தி பேசுங்க.. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க என்று சொல்லுங்க.. மக்களுக்கு தெளிவுபடுத்துங்க.. அமைச்சர் விலைவாசி உயரவில்லை. அரிசி விலை உயரவில்லை என்று சொல்கிறார். நான் கேட்கிறேன் மாண்புமிகு அமைச்சர் அரிசி வாங்கி சோறு தான் சாப்பிடுறாரா.. அவர் ஆடிட்டராக இருந்தவர். அவருக்கு எப்படி இந்த கஷ்டம் தெரியும். சாதாரண ஏழை மக்கள் அரிசிக்கடைக்கு சென்று வாங்கும் மக்களுக்கு தான் இது தெரியும். மாண்புமிகு அமைச்சரை கூப்பிடுங்க.. விலைவாசி உயரவில்லை என்று சொல்கிறீர்கள் அல்லவா.. இன்னைக்கோ, நாளைக்கோ வாங்க.. மயிலாப்பூர் பஜாரில் போய் வாங்கலாம்.. இல்லாவிட்டால் சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் போய் வாங்கலாம். எங்க வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் நான் வருகிறேன். விலைவாசி உயரவில்லை என்று சொல்கிறீர்கள் அல்லவா.. நான் ஏறியுள்ளது என்று காட்டுகிறேன். அப்படி நான் நிரூபித்து விட்டேன் என்றால் நீங்கள் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயாரா இருக்கீங்களா? என்பதை இதன் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன். என்று கூறினார்.மக்கள் அழுதுகொண்டு இருக்கிறார்கள்
ஆளே இல்லாமல் போய்டுவீங்க..
அரிசி, சர்க்கரை விலை ஏறவே இல்லையாம்.. விலைவாசி குறைவாகத்தான் இருக்காம்.. சொல்வது உணவுத்துறை அமைச்சர்
சோறு தான் சாப்பிடுகிறாரா?