டபுள் லாபம் திமுக - பாமகவுக்கு.. விஜய்க்கு அன்புமணியின் மாஸ்டர் பிளானா? 40% ஓட்டு தவெகவுக்கு ஆபத்தா?

  • சென்னை: அன்புமணி ராமதாஸ் இப்போது பாமகவின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்துள்ளார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்ததால், வரவிருக்கும் எம்பி தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அவர் உறுதியான முடிவை எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான அய்யநாதன்.

    Advertisement

    சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "இடைத்தேர்தலில் பாமக எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்திருப்பது, வெளிப்படையாகப் பார்க்கும்போது அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. அதேசமயம், தவெக தலைவர் விஜய்யை ஒரு பெரும் சக்தியாக வளர விடாமல் தடுக்கும் எண்ணம் பாமக உள்ளிட்ட மற்ற எல்லா கட்சிகளுக்குமே இருக்கிறது.

    Advertisement

    அதிமுக - பாமக

    பட்டியலின சமூகம் மற்றும் பிற சமூகங்களின் வாக்குகளில் சுமார் 30% முதல் 40% வரை விஜய்யை நோக்கிச் செல்லும் சூழல் நிலவியது. பாமக இப்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகி நடுநிலை வகிப்பது, அந்த வாக்குகள் விஜய்க்கு சென்றுவிடாமல் தடுத்து, மறைமுகமாக திமுகவுக்குச் சாதகமான சூழலை உருவாக்குகிறது.

    அன்புமணி ராமதாஸ் இப்போது பாமகவின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்துள்ளார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்ததால், வரவிருக்கும் எம்பி தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அவர் உறுதியான முடிவை எடுப்பார்.

    Advertisement

    ஏனென்றால், பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக, விஜய்யின் வருகையால் பலவீனப்பட்டு வருகிறது.. பலவீனமடைந்து வரும் அதிமுகவுடன் நீடித்தால் பாமகவும் பலவீனப்பட நேரிடும் என்பதால், அன்புமணி ராமதாஸ் அங்கிருந்து விலகி நிலையான சக்தியாக இருக்கும் திமுகவை நோக்கித் தன் பார்வையைத் திருப்பியுள்ளார்..

    திமுக - பாமக "இரட்டை லாபம்"

    தனது வாக்கு வங்கியை திமுக பக்கம் நகர்த்தும்போது, திமுகவுக்கு அவர்களின் வாக்குகள் கூடுதல் பலம் சேர்க்கும்.. பதிலுக்கு பாமகவுக்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறவும், எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது மத்திய, மாநில அளவில் அமைச்சுப் பதவிகளைப் பெறவும் வழிவகுக்கும்,.

    Advertisement

    அதுமட்டுமல்ல, திருமாவளவனின் விசிக கூட்டணியை விட்டு நகர்ந்துவிட்ட நிலையில், திமுகவுக்கு நம்பகமான 3-வது பெரிய சக்தியாக பாமக மட்டுமே இருக்கிறது... இதனால் பாமகவை கூட்டணிக்குள் ஏற்பதில் திமுகவுக்கும் விருப்பம் இருக்கும்.. பாமகவுக்கும் பெரிய அரசியல் கதவுகள் திறக்கும் இந்த பரஸ்பர அரசியல் கணக்கே திமுக, பாமக என 2 தரப்பிற்குமான "இரட்டை லாபம்".

    அதேநேரம், தவெக என்பது வெறும் ரசிகர் மன்ற பலத்தோடும் பாஜகவின் ஆதரவோடும் இயங்கும் அமைப்பு என்பதால், அதனுடன் இணைந்து பாமக தன்னை அழித்துக் கொள்ளாது.

    தவெக அரசு மீதான அதிருப்திகள்

    விஜய்யின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, கல்வியை தனியார்மயமாக்குவது, சென்னை விமான நிலைய நிர்வாகத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கக் கடிதம் எழுதியது மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைத் திட்டம் என அவரது பல முடிவுகள் பிற அரசியல் கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளன.

    Advertisement

    தேர்தலில் கூட்டணிகள் மாறினாலும், மக்களிடையே மின்சாரக் கட்டணம் 3 மடங்கு உயர்ந்திருப்பது, 30% முதல் 40% வரை அதிகரித்துள்ள விலைவாசி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற அன்றாடப் பிரச்சனைகளே தேர்தலில் பிரதான தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மின்சாரப் பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின் கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்திருப்பது தற்போதைய ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது" என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.

    English Summary

    DMK PMK Double Benefit.. Anbumani’s Master Plan to Check Vijay? 40% Vote Could Hurt TVK?