கார்த்திக் மோகன், எழிலன்.. சென்னை திமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் யார்? ஆலோசிக்கும் ஸ்டாலின்!

  • சென்னை: சென்னை திமுகவில் ஏற்கனவே உள்ள 6 மாவட்டங்கள், இனி 10ஆக உயர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலமாக மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோரின் அதிகாரம் குறைக்கப்படுவதோடு, எழிலன் நாகநாதன், கார்த்திக் மோகன் உள்ளிட்டோருக்கு அதிகாரம் கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.

    Advertisement

    திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் வேகம் எடுத்துள்ளன. திமுக செயற்குழுவில் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு வயது வரம்பும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் இனி ஒரு நபரால் 3 முறைகளுக்கு மேல் மாவட்டச் செயலாளராக தொடர முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    இதன் மூலமாக குறுநில மன்னர்களாக நிர்வாகிகள் உருவாக முடியாத சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை அனுசரித்து செல்ல வேண்டிய நிலை மாவட்டச் செயலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மறுபக்கம் அதிமுக பாணியில் மாவட்டச் செயலாளர்களை நியமித்து வந்த திமுக, தற்போது மீண்டும் தனது பழைய ஸ்டைலுக்கு திரும்ப முடிவு செய்திருக்கிறது.

    தேர்தல் மூலமாகவே இனி ஒவ்வொரு நிர்வாகியும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் முன்னாள் அமைச்சர்களான சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் இருவரின் அதிகாரங்களையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இருவரும் தான் அதிக தொகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

    Advertisement

    ஆனால் சேகர்பாபு கட்டுப்பாட்டில் இருந்த கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். மா.சுப்பிரமணியன் சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். இதனால் சென்னையில் 6ஆக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை இனி 10ஆக உயர்த்த திமுக தலைமை முடிவு எடுத்துள்ளது. அதன்படி திருவொற்றியூர், ஆர்கே நகர் ஆகிய தொகுதிகள் ஒரு மாவட்டத்திற்குள் வரும் என்று தெரிகிறது.

    பெரம்பூர், ராயபுரம் தொகுதி ஒரு மாவட்டமாகவும், மாதவரம் - கொளத்தூர் தொகுதி ஒரு மாவட்டமாகவும், துறைமுகன் - திரு விக நகர் ஒரு மாவட்டமாகவும், அம்பத்தூர் - மதுரவாயல் ஒரு மாவட்டமாகவும், தி நகர் - விருகம்பாக்கம் ஒரு மாவட்டமாகவும், சைதாப்பேட்டை - மயிலாப்பூர் ஒரு மாவட்டமாகவும், எழும்பூர் - வில்லிவாக்கம் ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட உள்ளது.

    Advertisement

    அதேபோல் வேளச்சேரி - சோழிங்கநல்லூர் ஒரு மாவட்டமாகவும், சேப்பாக்கம் - ஆயிரம் விளக்கு ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட உள்ளது. இதில் அண்ணா நகர் தொகுதி சேப்பாக்கம் தொகுதியுடன் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோரின் அதிகாரங்கள் குறைக்கப்படும்.

    அதேபோல் சிற்றரசு, சுதர்சனம், மயிலை வேலு, ஆர்டி சேகர் ஆகியோரின் அதிகாரங்கள் அதிகரிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. மறுபக்கம் புதிய மாவட்டங்களுக்கான மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு பிடிக்க பிரபாகர் ராஜா, கார்த்திக் மோகன், எழிலன் நாகநாதன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

    English Summary

    DMK: Power Diluted for Ma. Subramanian and Sekar Babu as New Faces Rise in the Chennai DMK