பட்ஜெட்டில் கட்டம் கட்டும் திமுக! அடித்து ஆடியும்.. வேலைக்கு ஆகாத தவெகவின் பிளான்!

  • சென்னை: ஆக.5ம் தேதி தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தொடருக்குள் இரண்டு விஷயத்தில் தீவிரமாக இறங்க திமுக தலைமை முடிவெடுத்திருக்கிறது. இது முதலமைச்சர் விஜய்க்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    முதல் விஷயம் செந்தில் பாலாஜி மேட்டர். ஏற்கெனவே விஜய் கரூருக்கு போவதற்கு முன்னர் செந்தில் பாலாஜியை எப்படியாவது கைது செய்துவிடுவது என்று விஜய் தரப்பு ரொம்பவே மும்முரமாக வேலை பார்த்தது.

    Advertisement

    செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்

    ஆட்சியை கவிழ்க்க லஞ்சம் கொடுத்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தை நாடி, செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் முன்ஜாமின் பெற்றுவிட்டனர். இதனால் விஜய் கரூருக்கு போவதற்கு முன்னர் அவர்களை கைது செய்ய முடியவில்லை. ஆனாலும் இந்த விஷயத்தை விஜய் தரப்பு அவ்வளவு லேசாக விடுவதாக இல்லை. கரூர் குரூப்பை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என்று அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியது.

    புதிய முயற்சி

    எனவே, பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேலைகள் சூடுபிடித்தன. டாஸ்மாக்கில் முறைகேடு செய்ததாக செந்தில் பாலாஜி, விசாகன் ஐஏஎஸ் உட்பட 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. வழக்கமாக மாநில விசாரணை அமைப்புகள் பதிவு செய்யும் வழக்கிலிருந்துதான் மத்திய புலனாய்வு அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கும்.

    Advertisement

    ஆனால், இந்த விஷயத்தில் அமலாக்கத்துறை ஏற்கெனவே பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் புதிய வழக்குகளை பதிவு செய்திருக்கின்றனர்.

    தவெக பிளானில் ஓட்டை

    திட்டமிட்டபடி எல்லா ஆதாரங்களும் திரட்டப்பட்டிருக்கின்றன. நீதிமன்றத்தில் சமர்ப்பித்து கைது உத்தரவு பெறுவது மட்டுமே பாக்கி.. இதற்கிடையில் தான் கட்டம் கட்டப்படுவதை கவனித்த செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டிருந்தார். கிடைக்கவில்லை.. இருப்பினும் விஷயத்தில் தீவிரமாக களமிறங்கிய திமுக தலைமை.. உச்சநீதிமன்றத்தின் மூலம் முன்ஜாமீன் கேட்டு வாங்கியிருக்கிறது. இதனால் தவெகவின் பிளானில் பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது.

    ரவுண்டு கட்டும் திமுக

    திமுக சீரியஸாக இறங்கியிருக்கும் இரண்டாவது விஷயம் பட்ஜெட் கூட்டத்தொடர்தான். தேர்தல் வாக்குறுதிகளில் தவெக சொன்னதை எல்லாம் அமல்படுத்த வேண்டும் எனில், மிகப்பெரிய அளவுக்கு நிதி ஆதாரம் தேவைப்படும். அந்த அளவுக்கு தமிழ்நாட்டிடம் நிதி இல்லை. எனவே வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்காது. இதை வைத்து தவெகவை ரவுண்டு கட்ட வேண்டும் என்று திமுக தலைமை எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

    பட்ஜெட் கூட்டத்தொடர்

    அரசியலில் ஏறத்தாழ 80 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கட்சி, எதிர்க்கட்சியாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை ஆளும் கட்சி உணர வேண்டும். தவெகவின் அனைத்து பிம்பத்தையும் அடித்து நொறுக்க வேண்டும் என்று திமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறது. எனவே பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்பார்த்து திமுக எம்எல்ஏக்கள் காத்திருக்கின்றனர்.

    English Summary

    DMK: The budget session of the Tamil Nadu Assembly is set to begin on August 5. The DMK leadership has decided to aggressively pursue two specific issues during this session. This has created a new problem for Chief Minister Vijay.