பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணியிடம் அதிகம் பணம் வாங்கியதே நிர்மல் குமார்தானாமே- ஆர்.எஸ்.பாரதி அட்டாக்

  • சென்னை: ஜெம் கிரானைட் வீரமணியிடம் இருந்து அதிகப்படியாக பணம் வாங்கியதே அமைச்சர் நிர்மல் குமார்தான் என மக்கள் சொல்கிறார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 2 எம்எல்ஏக்களை BUY பண்ணியதால் வந்த ByElection இது. வேட்பாளர்களுக்கு இதுவரை போலீஸ் பாதுகாப்பே கொடுத்தது கிடையாது. ஆனால் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு கொடுத்திருப்பதற்கு காரணம் என்னவென்றால், மக்கள் இருவரையும் தொகுதிக்குள் வந்து வாக்கு சேகரிக்க விடவில்லை. வேட்பாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு என்ற இதுவரை தமிழகத்தில் இல்லாத ஒரு நடைமுறையை தவெக கொண்டு வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அந்த வேட்பாளர்கள் மீது இருக்கும் எதிர்ப்பை மிரட்டுவதற்கும் சமாளிப்பதற்கும் செய்துள்ளார்கள்.

    Advertisement

    "பணம் வாங்கியது நிர்மல்தான்"

    ஜெம் கிரானைட் விவகாரத்தில் அதிக பணம் வாங்கியது நிர்மல்குமார் மக்கள் சொல்கிறார்கள். தவெக கொடுத்த ஸ்டார் பேச்சாளர்களில் மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வன்னியரசு, சிந்தனைச் செல்வன், வைகோ, துரை வைகோ இடம் பெற்றுள்ளனர்.

    இதில் மதிமுக எல்லா அங்கீகாரத்தையும் இழந்த ஒரு கட்சி. எனவே வைகோவையும் துரை வைகோவையும் ஸ்டார் பேச்சாளர்களாக தவெக பயன்படுத்திக் கொள்வதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை. ஆனால் அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அண்மையில் அங்கீகாரம் கிடைத்தது. இவர்களை ஸ்டார் பேச்சாளர்களாக அறிவித்துள்ளது சட்டத்திற்கு எதிரானது என ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தப்பிவிட்டது ஸ்டாலின்- நிர்மல்

    திமுக ஆட்சியில் ஜெம் வீரமணியை தப்பவிட்டது ஸ்டாலின்தான் என அமைச்சர் நிர்மல் குமாரின் விமர்சனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். நிர்மல் குமார் கூறியிருப்பதாவது: ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம் எப்போது வந்தது?

    திமுக ஆட்சியில் புகார்

    எந்த காலத்தில் புகார் அளிக்கப்பட்டது? சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வீடியோ ஆதாரங்கள் இருந்தும் அவர் மீதான நடவடிக்கைகள் யார் உத்தரவால் நிறுத்தப்பட்டன?

    ஸ்டாலினுக்கு தெரியாதா

    அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலினுக்கு இதை பற்றி தெரியாதா? அவர்தாநே அப்போது சட்ட ஒழுங்கு விவகாரத்தை கையாண்டு வந்தார். இந்த பெரிய விவகாரமானது, ஸ்டாலினுக்கு நன்கு அறிந்த நபரால் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏன் அவரது ஆட்சிக் காலத்தில் மூடி மறைக்கப்பட்டது?

    Advertisement

    பொள்ளாச்சி சம்பவம்

    பொள்ளாச்சி சம்பவத்திற்கு நிகரான ஒரு குற்றத்தை வீரமணி நிகழ்த்தியுள்ளார். அது குறித்து திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த பாலியல் குற்றச் சம்பவத்தில் யார் யாரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு குற்றவாளிகளை தப்பவிட்டனர் என ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சூடுபிடித்த ஜெம் கிரானைட்

    ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு தற்போது தவெக ஆட்சியில் சூடுபிடித்துள்ள நிலையில் அடுத்தடுத்து பரபரப்புகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் சென்னையில் பணியாற்றிய காவல் துறை உயரதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப சென்னை போலீஸ் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் முதல்வர் விஜய்யே தலையிட்டு முடுக்கிவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    ஜெம் வீரமணி மீதான குற்றச்சாட்டு

    ஜெம் கிரானைட் வீரமணி, படிக்க வைப்பதாக கூறி ஏராளமான சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் ஒரு குற்றவாளிகளையும் விடக் கூடாது என முதல்வர் விஜய், காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

    English Summary

    DMK R.S.Bharathi criticises Minister Nirmal Kumar in Gem Granite Veeramani assault case.