மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆ.ராசா.. விசிக, ஐயூஎம்எல் மீது கடுமையான வார்த்தைகளில் விமர்சனம்

  • சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் பரபரப்புகள் ஓயவில்லை. ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட திமுக எதிர்க்கட்சியாகிவிட்டது. திமுகவின் கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சியும் தவெக அமைச்சரவையில் இடம் பிடிக்கவுள்ளனர். இது திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விசிக மற்றும் ஐயூஎம்எல் மீது திமுக மூத்த தலைவர் ராசா வைத்துள்ள விமர்சனம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. விஜயுடன் 9பேர் அமைச்சராக பதவியேற்றனர். நேற்று மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்று விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சியும் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளது. அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸை தொடர்ந்து விசிக, ஐயூஎம்எல் மீதும் திமுக விமர்சனம் வைக்க தொடங்கியுள்ளது.

    Advertisement

    ராசா சர்ச்சை விமர்சனம்

    இதுகுறித்து திமுக துணைப்பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ. ராசா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முன் 'ஏற' தரப்பட்ட 'ஏணியும்' மூட சாதியை நொறுக்க வேண்டிய 'சிறுத்தையும்' வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி - புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை!

    பெரியாரின் 'காலதேச வர்த்தமான' த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!" என்று கூறியுள்ளார். ராசாவின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுகவினர் இதை அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். அதேநேரத்தில் ராசா கடுமையான சொற்களால் விசிக, ஐயூஎம்எல் ஆகியோரை விமர்சித்துள்ளதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.

    Advertisement

    பலரும் எதிர்ப்பு

    திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அதிகாரம் இழந்த வெறியில் இன்னும் இன்னும் ஆழமாக தனது அசலான அதிகாரவெறி கொண்ட அருவருப்பான தன்மையை நன்றாக பாருங்களேன் என்று தன்னை தானே தோலுரித்து காட்டிக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இதுதான் சமூக நீதிக்கும், பெண்ணியத்திற்கும் கொடுக்கும் மரியாதையா என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    English Summary

    DMK Raja: VCK and IUML to be include in TVK Ministry. DMK Raja’s comment sparks controversy on VCK and IUML.