சென்னை: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்க திமுக தயாராகி வருவதாக அறிவாலய வட்டாரங்களில் பேச்சுகள் அதிகரித்துள்ளது. இதற்கான முதற்கட்டமாகவே மாணிக்கம் தாகூருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை கொண்டு திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே, காங்கிரஸ் கட்சி நேராக பனையூர் சென்று தவெக உடன் கூட்டணியை அமைத்தது. திமுக உடனான கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டது தொடர்பாக ஸ்டாலினிடம் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மீது திமுக தலைமையும், திமுக தொண்டர்களும் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் திமுகவை தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர். டெல்லியில் திமுகவின் பலத்தை அறிந்த பின்னரும் கூட காங்கிரஸ் கட்சி திமுகவை எளிதாக டீல் செய்வது ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தேசிய அளவில் 3வது அணி அமைக்கும் முயற்சியில் ஸ்டாலின் தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்க திமுக எம்பி கனிமொழியும் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். மறுபக்கம் கரப்பான் ஜனதா கட்சிக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர் அணி நிற்கும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிஜேபி கட்சி தங்களின் வாக்குகளை கைப்பற்றுவதாக காங்கிரஸ் கட்சி கருதுகிறது. இதனிடையே லோக்சபா தேர்தலுக்கு திமுக தயாராக தொடங்கி இருக்கிறது. அடுத்ததாக நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மிகப்பெரிய பிம்பத்தை உருவாக்க திமுக தலைமை தயாராகி வருகிறது. "காங்கிரஸ் ஒரு துரோகி" என்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள்ள திமுக தயாராகிவிட்டது. என்ன நடந்தாலும் காங்கிரஸ் மற்றும் விசிகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் எண்ணத்தில் உதயநிதி ஸ்டாலின் இல்லை. இதனால் தமிழ்நாடு மற்றும் தேசிய அளவில் புதிய கூட்டணியை அமைக்கும் நோக்கில் திமுக களமாட தொடங்கி இருக்கிறது. இதனால் இந்தியா கூட்டணியில் பிளவு உருவாகுமா என்று காங்கிரஸ் கட்சியிலும் அச்சம் அதிகரித்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.SIR-ஆல் தான் ஸ்டாலின் தோற்றார்.. ’கொளத்தூர் கொத்து பரோட்டா’ பர்னிச்சரை உடைத்த திருமா! விஜய் ஷாக்!