பண்ணையார் மனப்பான்மை! அறிவாலயத்தில் ரிப்போர்ட்! சீட்டுக்களை கலைத்துப் போடும் ஸ்டாலின்! மாறும் திமுக!

  • சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு திமுகவை மறு சீரமைக்கும் வேலைகளை தொடங்கியுள்ளார் அந்த கட்சியின் தலைவரான முக ஸ்டாலின். ஏற்கனவே தமிழகம் முழுவதும் திமுக களஆய்வு குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளை கட்சியினர் சொல்லியிருக்கும் நிலையில் பட்டியல் மக்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்ற புகாரே அதிகம் சொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பட்டியல மக்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களால பட்டியலினத்தவரை நியமிக்கலாம் என்ற ஐடியாவில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

    Advertisement

    குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வி அடைந்ததை அந்த கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் பதினைந்துக்கும் மேற்பட்ட பலம் பொருந்திய அமைச்சர்களும் படுதோல்வியை சந்தித்தனர்.

    Advertisement

    இதை அடுத்து தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய முடிவு செய்த திமுக தலைமை கள ஆய்வு குழுக்களை அமைத்தது. தொடர்ந்து மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் அந்த குழு ஆய்வு மேற்கொண்டது.

    திமுக

    கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், அடிமட்ட தொண்டர்கள் என பல தரப்பினரை நேரில் சந்தித்து கருத்துக்களை சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு திமுக தலைவர் ஸ்டாலினிடம் அந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் நீண்ட காலமாக கட்சிக்குள் இருந்த அதிருப்தி, நிர்வாக குறைபாடுக,ள் தொகுதி பிரச்சனைகள், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    மு.க.ஸ்டாலின்

    தொடர்ந்து தனது பண்ணை வீட்டிலும் வீட்டிலும் இந்த அறிக்கையை விரிவாக ஆய்வு செய்த ஸ்டாலின், இது தொடர்பாக நிர்வாகிகளிடமும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த அறிக்கையில் பெரிய அளவில் தொண்டர்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கருத்துப்படி, வேட்பாளர்களுக்கு எதிராக நிர்வாகிகள் உள்ளடி வேலை பார்த்தது, சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்களுடன் கூட்டு சேர்ந்தது என அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம் பெற்றிருந்தது.

    முன்னாள் அமைச்சர்கள்

    அது மட்டும் அல்லாமல் திமுக ஆட்சியில் அதிகாரம் மையங்களாக செயல்பட்ட சில முன்னாள் அமைச்சர்கள் பெரிய அளவில் கட்சிக்கு எதிராகவே வேலை செய்திருக்கிறார்கள். தாங்கள் மட்டும் என்றால் போதும் தங்கள் மாவட்டத்தில் இருக்கும் வேட்பாளர்களின் வெற்றி குறித்து அவர்கள் ஆர்வம் காட்டவில்லை எனவும், அவர்களது செயல்பாடுகள் தான் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்க காரணம் என கூறியுள்ளனர்.

    Advertisement

    பட்டியலினத்தவர்

    அது மட்டும் அல்லாமல் தமிழக முழுவதும் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களை மாவட்ட செயலாளராக இருக்கும் நிலையில் பட்டியலின மக்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழக வெற்றி கழகத்தில் 20க்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட நிலையில் தனி தொகுதிகளிலும் ஒரு சிலர் வேட்பாளர்களாக களம் கண்டனர்.

    தவெக அமைச்சரவை

    அவர்களில் பெரும்பாலானோர் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் தவெக அமைச்சரவையில் எட்டு பேர் பட்டியலின அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த சூழலில் தான் திமுகவில் பட்டியலின மக்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுதுவதாக சொல்லப்படுகிறது. தற்போதைக்கு வாசுதேவநல்லூர் ராஜா, சிவி கணேசன், திருவள்ளூர் ரமேஷ் ஆகிய மூன்று பேர் மட்டுமே மாவட்ட செயலாளராக இருக்கின்றனர்.

    Advertisement

    2026 தேர்தல்

    தற்போது தமிழக அரசியல் களம் முற்றிலுமாக மாறி இருக்கும் நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு கட்சியில் மாற்றம் அவசியம் என உணர்ந்துள்ள திமுக தலைமை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் பொறுப்ப வழங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறதாம். தற்போது கிடைத்த தகவலின் படி சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளராக நியமிக்க படலாம் என சொல்லுகின்றனர்.

    திமுக மறுசீரமைப்பு

    தற்போது திமுகவை மறுசீரமைப்பு செய்ய தங்கம் தென்னரசு, கீதாஜீவன், சக்கரபாணி, சிவசங்கர், தமிழரசி, அப்துல்லா, பரந்தாமன், எழிலன், முரசொலி, கருணா ஆகியோர் இடம்பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசி உள்ளனர் .அப்போது புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம், மாவட்டங்களை இன்னும் அதிகமாக பிரிக்க வேண்டும் என சொன்னார்களாம் இதை எடுத்து அந்த மறுசீரமைப்பின் முக்கிய அம்சமாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த பலர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்படலாம் என்கின்றனர் அறிவாலயத்தினர்.

    English Summary

    Stalin reportedly plans a major DMK organisational overhaul with increased SC representation in district secretary posts after the 2026 defeat.