இதுதான் ட்விஸ்ட்டே..பெரிய கட்சிகள் இல்லாமல் சாதித்த திமுக! பின்னணியில் ஸ்டாலின் போட்ட மாஸ்டர் ப்ளான்

  • சென்னை: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சற்றே அதிர்ச்சி தரும் விதமாகத்தான் இருக்கிறது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி 10,000 ஓட்டுகள் வித்தியாசத்துக்குள் வென்றது நிலைமை சற்று சீரியஸாக இருப்பதைத் தான் காட்டுகிறது. அதே நேரத்தில் சாதி உட்பிரிவுகளை தாண்டி கணிசமான வாக்கு வங்கியை திமுக பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் கூட்டணியிலிருந்த காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த தேர்தலில் இல்லாத நிலையிலும், தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளை அந்த கட்சி கணிசமாக அள்ளி இருக்கிறது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல் இடைத்தேர்தலில் தமிழகம் சந்தித்திருக்கிறது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தனி தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்து இருக்கும் நிலையில், தவெக, திமுக, அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

    Advertisement

    சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்த நிலையில் தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த திமுக இரண்டாவது இடத்துக்கும், தாராபுரத்தில் இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துள்ளது.

    இந்த தேர்தலை பொருத்தவரை அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்த நிலையில், தவெகவின் வாக்கு வங்கி அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் பெரிய கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி மாறிய நிலையிலும் திமுக தனது வாக்கு சதவீதத்தை கிட்டத்தட்ட தக்க வைத்துள்ளது.

    Advertisement
    செத்த பாம்பாக அதிமுக.. ஏக நெருக்கடியில் எடப்பாடி! மீண்டும் ஒன்று கூடும் வேலுமணி & கோ! மெகா ப்ளான்!

    மதுராந்தகத்தில் திமுகவின் வாக்கு வங்கி 30 சதவீதத்தில் இருந்து 29 சதவீதமாகவும், தாராபுரத்தில் 32 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக குறைந்து இருக்கிறது. என்றாலும் ஏற்கனவே சொன்னது போல பெரிய கட்சிகள் இல்லாமல் தேமுதிக உள்ளிட்ட சிறிய கட்சிகளின் கூட்டணியோடு இந்த வாக்கு வங்கியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு திமுகவின் வேட்பாளர் தேர்வு தான் காரணம் என்கின்றனர்.

    தாராபுரம் தொகுதியை பொருத்தவரை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சுமார் 35 சதவீதம் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் தனிப்பெரும் வாக்கு வங்கி அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் பட்டியலின மக்கள் 26 சதவீதமும், அருந்ததியர் சமூகத்தினர் 15 சதவீதமும் பரவலாக வசிக்கின்றனர். குறிப்பாக தேவேந்திர குல வேளாளர் ஓட்டு வங்கி 9 முதல் 11 சதவீதம் இருக்கிறது.

    Advertisement
    தாராபுரம் இடைத்தேர்தல்! பேரூராட்சிகளில் அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளிய தவெக! இதை கவனிச்சீங்களா?

    செங்குந்த முதலியார் 10% வாக்கு வங்கியை கொண்டவர்களாக இருக்கிறார்கள். தாராபுரம் நகராட்சி பகுதியில் நெசவு சார்ந்த தொழில் அதிகம் உள்ள பகுதி இங்குதான் பிசி சமூகத்தினர் அதிகம் வசிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் செட்டியார்கள், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் நகர்ப்பகுதிகளில் அதிகம் வாழும் வாக்கு வங்கியாக இருக்கிறார்கள்.

    இது மட்டுமல்லாமல் போயர், நாயக்கர், விஸ்வகர்மா, நாடார் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் நகரத்திலும் கிராமங்களிலும் வசிக்கின்றனர். பொதுவாக தனித் தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சுற்றியே இருக்கும். ஒரு சமூகத்தை சேர்ந்த வேட்பாளர் நிற்கும் போது மற்ற சமூக வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி கட்சிகள் மூலம் வாக்கு வங்கியை தக்க வைக்க அரசியல் கட்சிகள் முயலும்.

    Advertisement

    ஆனால் தற்போது விசிக உள்ளிட்ட கட்சிகள் இல்லாத நிலையில் அங்கு தனது வாக்கு வங்கியை திமுக தக்க வைத்திருக்கிறது. தாராபுரம் தொகுதியில் மொத்த வாக்காளர்களில் சுமார் 74 சதவீதம் பேர் பட்டினத்தை சேராதவர்கள் என்ற போதிலும் பட்டியலின மக்களை வாக்குகளை மட்டுமே நம்பி வெற்றி பெற முடியாது. கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தின் ஆதரவும் இங்கு தேவை.

    ஆனால் அந்த வாக்குகளை தவெகவும் அதிமுகவும் பிரித்துக் கொண்ட நிலையிலும், அருந்ததியர் வாக்குகளும், தேவேந்திர குல வேளாளர் வாக்குகளும் வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கிறது. இங்குதான் திமுக தனது ராஜதந்திரத்தை பயன்படுத்தி இருக்கிறது. தேவேந்திர குல வேட்பாளர்களை இடைத்தேர்தல்களில் நிறுத்தியதன் மூலம் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்குகளை அப்படியே அள்ளி இருக்கிறது. இதனால் தான் இந்த தேர்தலில் தோல்வியிலும் வெற்றி என திமுக சொல்லி வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    English Summary

    DMK nearly retained its vote share in Dharapuram and Maduranthakam bypolls despite losing major allies, with candidate selection emerging as a key factor.