திமுக ஆட்சி vs தவெக ஆட்சி.. கார் விலையில் ₹1.75 லட்சம் வித்தியாசத்தின் பின்னுள்ள உண்மை

  • சென்னை: திமுக ஆட்சியில்: 45 பொலேரோ = ₹4.05 கோடி (ஒன்று ₹9 லட்சம்), தற்போதைய தவெக ஆட்சியில்: 40 பொலேரோ = ₹2.90 கோடி (ஒன்று ₹7.25 லட்சம்) இந்த ₹1.75 லட்சம் வித்தியாசத்தின் பின்னுள்ள உண்மையான தரவுகள் என்று திமுகவினர் சில தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் தகவல் பற்றி பார்ப்போம.

    Advertisement

    முக்கிய காரணம் : செப்டம்பர் 2025-ல் மத்திய அரசு கொண்டுவந்த GST 2.0 சீர்திருத்தம் தான்.

    Advertisement

    செப்டம்பர் 2025க்கு முன் (திமுக கொள்முதல்): மஹிந்திரா பொலேரோ போன்ற கார்களுக்கு 28% GST + 3% Cess என மொத்தம் 31% வரி வசூலிக்கப்பட்டது. அதனால் வண்டியின் விலை ₹9 லட்சமாக இருந்தது.

    செப்டம்பர் 2025க்கு பின் (தற்போதைய கொள்முதல்): செஸ் வரி முழுமையாக நீக்கப்பட்டு, GST வெறும் 18% ஆகக் குறைக்கப்பட்டது.
    ஒரே அடியாக 13% வரி குறைந்ததால் காரின் அடிப்படை விலை ₹1.27 லட்சம் வரை சரிந்தது. இதன் காரணமாக அதன் மீதான Road Tax மற்றும் Insurance தொகையும் கணிசமாகக் குறைந்தது. ஒட்டுமொத்தமாக ஆன்-ரோடு விலையில் ஏற்பட்ட ₹1.75 லட்சம் மாற்றமே இந்த விலை வித்தியாசத்திற்கு முழுமையான காரணம். முந்தைய ஆட்சியில் ஊழலும் நடக்கவில்லை, தற்போதைய ஆட்சியில் எந்த மேஜிக்கும் நடக்கவில்லை" இவ்வாறு திமுகவினர் தகவல்களை பகிர்ந்துவருகிறார்கள்.

    Advertisement

    என்ன பிரச்சனை

    தவெக நிர்வாகிகள் சிலர், திமுக ஆட்சியில் 45 வண்டிகள் - ₹4.05 கோடி, தற்போதைய ஆட்சியில் 40 வண்டிகள் - ₹2.90 கோடி
    கிட்டத்தட்ட ஒரே அளவு வண்டிகள்... ஆனால் கோடிகளில் விலை வித்தியாசம்! மக்கள் பணம் எங்கே போனது? முழு விவரமும் வெளிவர வேண்டும் என கேள்வி இருந்தார்கள். இதற்கு தான் திமுகவினர் விளக்கம் அளித்து வருகிறார்கள்.

    அதேபோல் விஜய் நேற்று தொடங்கி வைத்த வண்டிகள் எல்லாமே திமுக ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டவை என்றும், வெறும் 10 நாளில் டெண்டர் விட்டு கார் வாங்குவது எல்லாமே சாத்தியமே இல்லை என்றும், தவறாக புரிந்து கொண்டு விஜய் ரசிகர்கள் ட்வீட்களை பதிவிட்டு வருவதாகவும் திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

    Advertisement

    இதையடுத்து தவெக நிர்வாகிகள் சிலர், இந்த கார் பிரச்சனையை எழுப்பிய நிர்வாகிகளை கண்டித்து பதிவிட்டதையும் காண முடிந்தது. அந்த பதவில் அவர்கள் கூறுகையில், ஹாப் ஆயில் தனமா எதையும் பேசாதீங்கயா. நம்ம ஆட்சிக்கு வந்து ரெண்டு வாரம்தான் ஆகுது. அதுக்குள்ள கார் ஆர்டர் பண்ணி நாற்பது கார் டெலிவரி ஆகிடுமா? ஒரு பேசிக் லாஜிக் கூட யோசிக்கணும். எவ்வளவோ பேர் உண்மைய ஆய்வு பண்ணி தகவல் போடுறாங்க. இந்த மாதிரி ஹாப் பேக்குடு செய்திகளை கிரியேட் பண்ணாதீங்க. இப்படிப்பட்ட விஷயங்களால நமக்குத்தான் கெட்ட பேர் வரும் என கண்டித்துள்ளார்.

    English Summary

    Under the DMK regime: 45 Boleros = ₹4.05 Crores (₹9 lakhs each); under the current TVK regime: 40 Boleros = ₹2.90 Crores (₹7.25 lakhs each). DMK members are circulating certain details, claiming them to be the actual data behind this difference of ₹1.75 lakhs. Let us examine the information they have shared.