“எதற்கெடுத்தாலும் கைதா? க்யூட் CM சார் உடனே முடிவெடுக்க வேண்டும்”- திமுக முன்னாள் MLA எழிலன் அட்டாக்

  • சென்னை: "மருத்துவப் பணியாளர்கள் விவகாரத்தில், தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதைச் செய்ய முடியவில்லை என தவெக அரசு வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்" என திமுக மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக மருத்துவர் அணிச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எழிலன், "மருத்துவப் பணியாளர்களை கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது. போராடுபவர்களை ஒடுக்குகிறது தவெக அரசு. போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    ஓர் அரசு எப்படி செயல்படப் போகிறது என்பதன் முன்னோட்டமாக தவெக அரசின் முதல் 100 நாட்களின் அணுகுமுறையப் பார்த்தாலே தெரிகிறது. செவிலியர்கள் போராட்டத்தில் பேச்சுவார்த்தை எனக் கூறி கைது செய்தனர். இன்று மருத்துவப் பணியாளர்கள் போராடியபோது அவர்களை கொடூரமான முறையில் காவல்துறை கையாண்டது. இதற்கு திமுக தனது வலுவான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

    தமது கொள்கை எதிரி பாஜக எனக் கூறிக் கொண்டு, சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பாஜகவுக்கு எதிராக குரல் எழுப்பவிடாமல் தடுத்து, சென்னையில் போராடியவர்களை கைது செய்திருக்கின்றது தவெக அரசு. முதல்வர் விஜய் மாற்றத்தை கொண்டு வருவார் என எதிர்பார்த்த மக்களுக்கு போராட்டக் களங்கள் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    Advertisement

    கடந்த கால இடைத்தேர்தல்களில் அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். ஆனால் தற்போது, இதுபோன்ற சூழல் இல்லை. ஆனால், விஜய் என்ற ஒரு நடிகர் திரையில் பேசியதற்கும், முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறனையும் மக்கள் பிரித்துப் பார்க்க தொடங்கிவிட்டார்களா?

    திமுக ஆட்சியில் பல்வேறு போராட்டக் களங்களில் போராடும் பணியாளர்களிடம் துறை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள் பேசுவார்கள். அதன்பின் சூழ்நிலையைப் பொறுத்து போராட்டக்காரர்களுக்கு விளக்கி கோரிக்கையை நிறைவேற்றுவார்கள்.

    ஆனால், தவெக ஆட்சியில் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராடுபவர்களை மிரட்டுவது, போராட்டக்காரர்களை முன்கூட்டியே கைது செய்வது, வீட்டுக் காவலில் வைப்பது, கழிவறைக்குச் செல்பவர்களை கைது செய்வது, டீக்கடையில் வைத்து கைது என நடவடிக்கை எடுக்கிறார்கள். இது குறித்து க்யூட் சிஎம் சார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Advertisement

    மருத்துவப் பணியாளர்கள் விவகாரத்தில், தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதைச் செய்ய முடியவில்லை என தவெக அரசு வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். போராட்டக் களங்களை பொறுத்தவரை, திமுக ஆட்சி காலங்களில் சுமுகமான தீர்வு கிடைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    "Regarding the issue of medical personnel, TVK government must openly admit its inability to fulfill the promises made in its election manifesto," stated Ezhilan, Secretary of the DMK Doctors Wing.