ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு

  • சென்னை: தவெக தலைவர் விஜய்யின் புதிய அமைச்சரவையில் விசிக இணைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியில் உள்ள முக்கிய ஆளுமைகளை ஒவ்வொன்றாகத் தங்கள் பக்கம் இழுக்க திமுக மிகத் தீவிரமான அரசியல் வியூகம் வகுத்துச் செயல்படத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. திமுகவின் ஆப்ரேஷனைத் தடுக்க முடியாமல் விசிக தலைமை தவித்து வரும் சூழலில், ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட விசிகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து திமுகவில் இணைய வழிவகை ஏற்பட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக அரசியல் களம் தற்பொழுது ஒரு புதிய, எதிர்பாராத திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய்யின் புதிய அமைச்சரவையில் விசிக இணைந்தது அக்கட்சியின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

    Advertisement

    ஆனால் வெளியில் பார்க்கும்போது அதிகாரப் பகிர்வாகத் தெரிந்தாலும், உள்கட்சிக்குள் இது மிகப்பெரிய சித்தாந்த மற்றும் அதிகார மோதல்களை வெடிக்கச் செய்துள்ளது.

    தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்றதை திமுக தலைமை துளியும் விரும்பாத சூழலில், விசிகவில் இருக்கும் ஆளுமைகளையும் முக்கியப் புள்ளிகளையும் ஒவ்வொன்றாகத் தங்கள் பக்கம் இழுக்க திமுக மிகத் தீவிரமான அரசியல் வியூகம் வகுத்துச் செயல்படத் தொடங்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திமுகவில் பனையூர் பாபு

    திமுகவின் இந்த அதிரடி நகர்வுக்கு முதல் விக்கெட்டாக விசிகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பனையூர் பாபு மாறியுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செய்யூர் சட்டமன்றத் தொகுதியைத் தனக்காகக் குறிவைத்து உழைத்த பாபுவுக்கு, தலைமை முன்ஆலோசனையின்றி சிந்தனைச் செல்வனுக்கு சீட் கொடுத்ததில் ஏற்கனவே அதிருப்தி இருந்தது.

    Advertisement

    அத்துடன் நேற்று வரை யாரை "ஆர்.எஸ்.எஸ்-சின் பிம்பம்" என்று விசிக விமர்சித்ததோ, அதே தவெக-வுடன் தற்பொழுது கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இணைந்ததை கொள்கை ரீதியாக பாபுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த உள்கட்சிப் பூசலையும் விரக்தியையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட திமுக தலைமை, அவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    அதிர்ச்சியில் திருமாவளவன்

    இதன் பலனாக, வரும் ஜூன் 7-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பனையூர் பாபு தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளார். அவருக்கு மதுராந்தகம் மற்றும் செய்யூர் உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் எனப் பேசப்படுகிறது.

    Advertisement

    பனையூர் பாபுவைத் தொடர்ந்து, விசிகவின் மற்றொரு முக்கிய முகமான ஆளூர் ஷாநவாஸும் திமுகவின் அடுத்த டார்கெட்டாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது.

    விசிகவின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற முக்கியப் புள்ளிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம், விசிகவின் அடித்தளத்தையே அசைக்க திமுக வியூகம் அமைத்துள்ளது. இந்த விவகாரம் விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விசிகவுக்கு முட்டுக்கட்டு

    நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த திருமாவளவன், இந்த ஆபத்தைத் தடுக்க அறிவாலயத்திற்குச் சென்று திமுக தலைமையிடம் நேரில் பேசிச் சமரசம் செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    ஆனால், "நீங்கள் தவெக அமைச்சரவையில் இணைந்துவிட்ட சூழலில், இப்போது திமுக தலைமையைச் சந்திப்பது அரசியல் ரீதியாக நன்றாக இருக்காது" எனத் தவெக தலைமை விசிகவுக்கு முட்டுக்கட்டைப் போட்டு, அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியதாகத் தகவல் கசிந்துள்ளது.

    தவெகவின் இந்தத் தடையால் திருமாவளவனால் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் போனது, விசிகவின் அதிருப்தி நிர்வாகிகள் எளிதாக திமுக பக்கம் சாய வழிவகை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    திமுகவுக்கு புதிய பலம்

    பனையூர் பாபுவின் விலகலைத் தொடர்ந்து ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட அடுத்தடுத்த விசிக விக்கெட்டுகளை வீழ்த்த திமுகவின் வலை தயாராக இருக்கும் இந்தச் சூழல், தமிழக அரசியல் களத்தில் விசிகவுக்குப் பெரும் பலவீனத்தையும், திமுகவுக்குப் புதிய பலத்தையும் கொடுத்துள்ளது.

    Advertisement

    சித்தாந்தக் கூட்டணியா அல்லது அதிகாரக் கூட்டணியா என்ற குழப்பத்தில் விசிக தொண்டர்கள் தவித்து வரும் நிலையில், திமுகவின் இந்த ராஜதந்திர நகர்வுகள் திருமாவளவனின் அரசியல் எதிர்காலத்திற்கே ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

    English Summary

    Stalin’s Political Move Sparks Buzz… BJP in the Background? Alliance on the Cards? A Political ‘Next Big Bombshell’ Ahead