இடைத்தேர்தல் திமுக 2ஆம் இடம்.. பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.. டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலுமே கடந்த முறை திமுக தோல்வி அடைந்தது. ஆனால் இந்த முறை 2-வது இடத்திற்கு வந்து இருக்கிறோம். இருந்தாலும், தேர்தல் முறையாக நடக்கிறதா? அல்லது வேறு கணக்கில் தேர்தல் ஆணையம் நடத்துகிறதா? என்று தெரியவில்லை என்று திமுக அமைப்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

    Advertisement

    இதில் எதுவும் சதித்திட்டம் உள்ளதா? ஒன்றிய அரசின் கை அல்லது ஞானேஷ் குமாரின் பங்களிப்பு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    Advertisement

    இரண்டு தொகுதிகளிலுமே கடந்த முறை திமுக தோல்வி அடைந்த தொகுதிதான் இந்த முறை 2-வது இடத்திற்கு வந்து இருக்கிறோம். தாரபுரத்தில் மூன்றாம் இடத்தில் இருந்து 2 ஆம் இடத்திற்கு வந்துள்ளோம். முன்னேற்றம் தெரிகிறது. வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவில்தான் என்ன நிலை என்று தெரியும்.

    இருந்தாலும் பல வித சந்தேகங்கள் எழுந்து இருக்கின்றன. குறிப்பாக இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்து பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. அந்த செய்தியில் வாக்காளர் பட்டியலில் சில வாக்குச்சாவடிகளில் எங்கெல்லாம் திமுக அதிக வாக்குககளை பெற்றுள்ளதோ.. அங்கெல்லாம் வாக்குகள் நீக்கப்பட்டு உள்ளன என்பதை இந்து ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது. எனவே இதில் எதுவும் சதித்திட்டம் உள்ளதா? ஒன்றிய அரசின் கை அல்லது ஞானேஷ் குமாரின் பங்களிப்பு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

    Advertisement
    இடைத்தேர்தல் முடிஞ்சாச்சு.. அமைச்சரவையில் மாற்றம் வருமா? அமைச்சர் நிர்மல் குமார் ரியாக்‌ஷன்

    கடந்த முறை தவெக தோல்வி அடைந்தது. இந்த முறை முன்னிலை பெற்றுள்ளது. 7 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவித்து இருக்க வேண்டிய சூழலில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் முறையாக நடைபெற்றுள்ளதா? என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது. தவெக வேட்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. அவர்களை மக்கள் வரவேற்கவில்லை.

    வாக்கு கேட்டு வராதே என்று விரட்டி அடித்து இருக்கிறார்கள். அதற்கு பிறகு என்ன நடந்தது? நாளேட்டில் வந்த செய்தியை பார்க்கும் போது தேர்தல் முறையாக நடக்கிறதா? அல்லது வேறு கணக்கில் தேர்தல் ஆணையம் நடத்துகிறதா? என்று தெரியவில்லை. அதிமுக வெற்றி பெற்ற தொகுதியில் அதிமுக 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு, திமுக இரண்டாம் இடம் பெற்றுள்ளது. பல ஊர்களில் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்ப்பு ஏன் கிளம்ப வேண்டும்.

    Advertisement
    உலக முட்டை தினம் இன்று.. எங்க ஓட்டை எப்போ சார் எண்ணுவீங்க? காத்துக் கிடக்கும் நாம் தமிழர் தம்பிகள்!

    அவரது நடவடிக்கைகள் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபடுவதற்கு ஏற்ற வகையில் அமைந்து இருக்கின்றன. அவர் வெளிப்படையாக ஆளும் கட்சியை ஆதரித்து செயல்படுகிறார் என்ற குற்றசாட்டு அடிபடையில் போராட்டம் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் ஒரு சார்பு நிலைப்பாட்டுடன் இருந்தால் முடிவுகள் இப்படித்தான் இருக்கும்" என்றார்.

    English Summary

    The DMK lost in both the Maduranthakam and Dharapuram constituencies last time, but this time we have secured second place. However, it is unclear whether the election is being conducted properly or if the Election Commission is operating based on some other agenda, said DMK Organizing Secretary T.K.S. Elangovan.