தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டால் தான் புத்தி வரும்.. வைச்சாங்களா ஆப்பு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சரமாரி அட்டாக்

  • சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டால் தான் புத்தி வரும்.. 200 யூனிட் இலவசம் என சொன்னார்கள், ஆனால் முன்பு 5 ஆயிரம் கரண்ட் பில் கட்டியவர்கள் இப்போது 15 ஆயிரம் கட்டுகிறார்கள்.. வைச்சாங்களா ஆப்பு.. இப்படியெல்லாம் பண்ணுவாங்க.. ஏமாந்துவிடாதீங்க.. ஏமாந்துடாதீங்க என சொன்னேனே கேட்டிங்களா? என விஜய்யின் ஆட்சியை திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் நேற்று திமுக நிர்வாகி கட்பீஸ் பழனியின் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தவெக ஆட்சியில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அவர் கூறியதாவது:-

    Advertisement

    பட்டால் தான் புத்தி வரும்

    சில பேருக்கு சொன்னால் புரியும்.. சில பேருக்கு அனுபவித்தால் தான் தெரியும்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டால் தான் புத்தி வரும் என்பதற்கு உதாரணம் இந்த 2026 தேர்தல். திமுக தொடங்கி 75 ஆண்டு காலம் ஆகியுள்ளது. இவ்வளவு நாட்களில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எவ்வளவு திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது. கடந்த 5 ஆட்சியில் மு.க ஸ்டாலின் எவ்வளவு திட்டங்களை கொண்டு வந்திருந்தார். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் 21 மணி நேரம் மக்களுக்காக உழைத்தார்.

    Advertisement

    நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து தளபதி ஸ்டாலின் இன்று ஆட்சிக்கு வந்து இருந்தால், எல்லாரும் கடைக்கு சென்று 8 ஆயிரம் ரூபாய் கூப்பனை கொடுத்து உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வீட்டில் அலங்கரித்து வைத்து இருப்பீர்கள். பாவம் உங்களுக்கு இது கிடைக்கவில்லை. மீண்டும் ஒருமுறை தளபதி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்திருந்தால் மாதம் ரூ.2,000 மகளிர் உரிமைத் தொகை கிடைத்து இருக்கும். கிடைத்து இருக்குமா? இருக்காதா?.. வந்த உடன் 5 கையெழுத்தை போட்டோமா போடவில்லையா? 2021 தேர்தலில் ஆட்சிக்கு வந்ததும்.

    சொன்னேனே கேட்டிங்களா?

    இப்போது இவர்களும் சொல்கிறார்கள், வந்ததும் 3 கையெழுத்து போட்டோம் என.. என்ன கையெழுத்து போட்டீங்க, நாங்க 5 ஆயிரம் கட்டிக் கொண்டு இருந்த கரண்ட் பில் இப்போது 15 ஆயிரம் வந்துவிட்டது. 200 யூனிட் இலவசம் என அறிவித்தார்கள். உடனே நான் மின்சார அட்டையை எடுத்துவிட்டு போனேன்.. அப்போது அவங்க சொல்றாங்க, அங்கே அறிவித்துவிட்டார்கள். ஆனால் இங்கு இன்னும் வரவில்லை என்று..

    Advertisement

    இதற்கு முன்பாவது கார்டை கொடுத்தால் அதில் எவ்வளவு யூனிட், எவ்வளவு தொகை என்பதை எழுதுவார்கள்.. ஆனால் இப்போது அப்படி எதாவது எழுதுகிறார்களா? வைச்சாங்களா ஆப்பு.. இந்த ஆப்பு எல்லாம் வரும் என தைரியமாக சொன்னது நான் தான்.. இப்படியெல்லாம் பண்ணுவாங்க.. ஏமாந்துவிடாதீங்க.. ஏமாந்துடாதீங்க என சொன்னேனே கேட்டிங்களா?

    ஸ்டிக்கரை ஒட்டி சிங்கப்பெண் திட்டம்

    அடுத்து சிங்கப்பெண் அதிரடிப்படை.. நாங்க வச்சு இருந்த போலீஸில் 4 பேரை கூப்பிட்டு யூனிபார்மை மாற்றி.. நாங்க வாங்கி விட்டு இருந்த வாகனங்களுக்கு கலரை மாத்தி, ஸ்டிக்கரை ஒட்டி, அதை 4 நாட்கள் ஷோ காட்டி, அந்த யூனிபார்முக்கே அந்த பெண்களிடம் இருந்தே காசு வாங்கி தொடங்கி வைச்சா அது சிங்கப்பெண் அதிரப்படையா.. இதுதான் அதிரடி சிஎம்மா?.. அப்போ என்ன சொன்னார், "ஸ்டாலின் சார், சாரி வேண்டாம், நீதி வேண்டும்" என்று கேட்டாரே.. இப்போது நாங்களும் அப்படி கேட்கட்டுமா?.. என்று பேசினார்.

    English Summary

    Sivaji Krishnamoorthy: "The people of Tamil Nadu will only learn through bitter experience... They promised 200 units for free, yet those who previously paid ₹5,000 for electricity are now paying ₹15,000 asked DMK speaker Sivaji Krishnamoorthy while criticizing the administration.