உங்களை யார் உதயநிதியுடன் போக சொன்னது.. சேகர் பாபுவுக்கு டோஸ்விட்ட ஸ்டாலின்.. நடந்தது என்ன?

  • சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட போது காவல்துறை வாகனத்தில் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் சிற்றரசு ஆகியோர் சென்றிருந்தனர். திமுக மேலிடத்தின் குட் புக்கில் இடம்பெறும் நோக்கில் உதயநிதி ஸ்டாலினுடன் சேகர்பாபு சென்ற நிலையில், அவருக்கு ஸ்டாலின் செம டோஸ் கொடுத்திருக்கிறார்.

    Advertisement

    ஆகஸ்ட் 4ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் வீட்டில் போலீசார் குவிக்கப்படும் தகவல் தெரிந்த உடனேயே முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடியாக நீலாங்கரை வீட்டிற்கு சென்றுவிட்டார். அவருக்கு பின் வழக்கறிஞர்கள் பரந்தாமன், சரவணன் உள்ளிட்டோரும், சிற்றரசும் வந்தனர்.

    Advertisement

    தொடர்ந்து முன்னாள் காவல்துறை வீட்டிற்குள் சென்ற பின் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு வந்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் கைதான போது அவர்களும் காவல்துறை வாகனத்திலேயே ஏறி தஞ்சாவூர் வரை சென்றனர். உதயநிதி ஸ்டாலின் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு டோல் கேட்டிலும் தொண்டர்கள் போலீசார் வாகனத்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

    ஆனால் சென்னையில் திமுகவினர் அமைதியாகவே இருந்தனர். அறிவாலயம் வாசல் மற்றும் நீலாங்கரை இல்லம் முன்பாகவே மட்டுமே திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே சென்னையில் திமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு பலரும் திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையையை உயர்த்தாததே காரணம் என்று விமர்சித்து வருகின்றனர்.

    Advertisement

    இதனால் ஸ்டாலினும் சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். இந்த சூழலில் உதயநிதியுடன் பயணித்து திமுக மேலிடத்தின் குட் புக்கில் இடம்பெறலாம் என்று கணக்கிட்டு சென்னையின் 3 மாவட்டச் செயலாளர்களும் கருதினர். இது ஸ்டாலினை டென்ஷனாக்கி இருக்கிறது.

    ஏனென்றால் மற்ற மாவட்டங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது, சென்னையில் மாவட்டச் செயலாளர் போராடி இருக்க வேண்டாமா என்று சேகர்பாபுவுக்கு ஸ்டாலின் டோஸ் விட்டுள்ளார். உங்களை யார் உதயநிதி ஸ்டாலினுடன் பயணிக்க சொன்னது? வழக்கறிஞர்கள் சென்றால் போதாதா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் சேகர்பாபு அப்செட்டில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    English Summary

    DMK: Stalin Lashes Out at Sekar Babu After Police Van Stunt to Win Favor with Udhayanidhi Stalin