இனி பவர் செண்டர் கிடையாது.. பதவிக்கு காலக்கெடு கொண்டு வரும் ஸ்டாலின்.. அறிவாலயத்தில் எடுத்த முடிவு!

  • சென்னை: திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு வயது வரம்பு மற்றும் காலக்கெடு நிர்ணயிக்க ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக மாவட்டச் செயலாளர்கள் பவர் செண்டராக தொடர்ந்து இருக்கும் சூழல் கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, அடுத்தடுத்து அடுத்தடுத்து பலருக்கும் வாய்ப்பு அளிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார். இதன்பின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொகுதி வாரியாக ஆய்வுகள் மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதனை அறிக்கையாக ஸ்டாலினிடம் பெரிய பெரிய பெட்டிகளில் சமர்ப்பித்தனர்.

    Advertisement

    அதனை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரைக்க புதிய குழு அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு ஆகஸ்ட் 5ஆம் தேதியே மறுசீரமைப்பு பரிந்துரை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த நிலையில் திமுகவின் தலைமை செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த செயற்குழுவில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே செயற்குழுவுக்கு பின் திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் திமுகவில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 78ல் இருந்து 102ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வயது வரம்பு மற்றும் காலக்கெடுவும் கொண்டு வரப்பட உள்ளது. நகரச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 60ஆகவும், மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 70ஆகவும் நிர்ணயிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மண்டல செயலாளர்களுக்கான பொறுப்பை மொத்தமாக முடிவுக்கு கொண்டு வரவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

    இதனிடையே புதிய மாவட்டச் செயலாளர்களாக இளைஞர்கள் மற்றும் பெண்களை நியமிக்க திமுக தலைமை தயாராகி இருக்கிறது. இதன் மூலமாக மாவட்டச் செயலாளர்கள் பவர் செண்டராக தொடர்ந்து நிலவும் சூழலும் முடிவுக்கு வரும். புதியவர்களுக்கு வாய்ப்பும் அளிக்க முடியும் என்று திமுக தலைமை கருதுகிறது. அதேபோல் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அறிவாலயத்தில் பரபரப்பான சூழல் நிலவு வருகிறது.

    English Summary

    DMK: Stalin Plans Age Cap and Term Limits for DMK District Secretaries to Curb Concentration of Power