திமுக + சிஜேபி.. அட இது லிஸ்ட்லயே இல்லையே.. தர்ணாவில் இறங்கிய தலைகட்டுகள்.. பரபரப்பான சென்னை

  • சென்னை: எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்துள்ள புகார் தேசிய அரசியலை அதிர வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் 2 ஆணையர்களே எஸ்ஐஆர் பணிகளில் மோசடி நடைபெற்றதாக போர் கொடி தூக்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை தீவிரமாக எதிர்த்து போராடுகின்றன. கரப்பான் பூச்சி ஜனதாதளம் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. சிஜேபிக்கு ஆதரவாக திமுக மூத்த நிர்வாகிகள் ராசா, மா சுப்ரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முன்னதாக பீகார் மாநிலத்திலும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்தமான எஸ்ஐஆர் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர். தற்போது தேர்தல் ஆணையத்திற்குள்ளும் இது புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    போராட்டகளம்

    தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி எஸ்ஐஆர் குளறுபடி குறித்து ஆட்சேபனை தெரிவித்தனர். 14 முறை எழுத்து பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய வாக்காளர் இணைப்பு, பழைய வாக்காளர்களை நீக்குதல், மேல்முறையீடு, ஷாப்ட்வேர், பார்ம் 6 திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அந்த புகாரை கண்டுகொள்ளவில்லை

    இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணைய செயல்பாட்டில் மத்திய பாஜக அரசின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கரப்பான் பூச்சி ஜனதாதளம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Advertisement
    முதல்வர் அறையில் இப்படி செய்யலாமா? அமைச்சர்கள் செய்தது அநாகரீகத்தின் உச்சம்! திமுக பரந்தாமன் சுளீர்

    சிஜேபி + திமுக

    கரப்பான் பூச்சி ஜனதாதளத்திற்கு ஆதரவாக சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை 40க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். அவர்களை சாந்திநகர் போலீசார் கைது செய்தனர். அவர்களை காவல்துறை தனி இடத்தில் அடைத்து வைத்துள்ளது. சிஜேபி கட்சியினருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, திமுக எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் மா சுப்ரமணியன் ஆகியோர் சென்றனர். நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு போராட்டம் நடத்தினர்.

    Advertisement

    சிஜேபிக்கு ஆதரவாக திமுகவினரும் தர்ணாவில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம், ஞானேஷ்குமாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கரப்பான் பூச்சி ஜனதாதளம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிஜேபி நிர்வாகிகளும் திமுக தலைவர் ஸ்டாலினை உயர்வாக பேசினர். காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய நெட்வொர்கை விட்டு விலகி நிற்கும் திமுக, சிஜேபி ஆதரவு நிலைப்பாட்டி எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Chennai DMK supported Cockroach Janata party over protest against Gyanesh kumar. DMK also involved protested in Besant nagar.