விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது

  • சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. கட்சியின் தலைவர் விஜய் முதல்வராகி உள்ளார். இந்நிலையில் தான் திமுகவில் அமைப்பு ரீதியாக பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக பாஜக ஸ்டைலில் திமுக இந்த மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி திமுக என்ன செய்யப்போகிறது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை. ஆனால் முதல் முறையாக அரசியல் களம் கண்ட தவெகவிற்கு மக்கள் ஓட்டுப்போட்டு அந்த கட்சியின் தலைவர் விஜய்யை முதல்வராக்கி உள்ளனர்.

    Advertisement

    இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் 'ஜென் - ஸி' தலைமுறையாகும். இவர்கள் தான் விஜய்யின் பெரிய பலமாக மாறி உள்ளனர். இவர்கள் தவெகவிற்கு ஓட்டுப்போட்டது மட்டுமின்றி வீட்டில் உள்ளவர்களை ஓட்டளிக்க வைத்துள்ளனர். இதுதான் திமுக, அதிமுக என்ற 2 திராவிட கட்சிகளையும் வீழ்த்தி உள்ளது.

    விஜய்யின் இந்த அரசியல் எழுச்சி என்பது தற்போது திமுக, அதிமுக என்ற இருகட்சிகளையும் உலுக்கிப்போட்டுள்ளது. தற்போது அதிமுக உள்கட்சி பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் திமுக எப்படியாவது தோல்வியில் இருந்து மீண்டு வர முயன்று வருகிறது. குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டு இருப்பதை அந்த கட்சியினரால் சகிக்க முடியவில்லை. அதோடு 2021ம் ஆண்டில் 133 இடங்களில் வென்ற திமுக தற்போது 59 தொகுதிகளில் சுருங்கி உள்ளது. இதனை கட்சிக்கு வார்னிங் சைனாக பார்க்கிறார் ஸ்டாலின். அதோடு தவெகவின் எழுச்சியை தொடக்கத்திலேயே முடக்க வேண்டும். இல்லாவிட்டால் அது திமுகவின் எதிர்காலத்துக்கு பெரிய பாதிப்பாக அமையும் என நினைக்கிறார் முக ஸ்டாலின்.

    Advertisement

    இதனால் கட்சியின் கட்டமைப்பில் பெரிய மாற்றம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு வருகிறார். அதன்படி திமுகவில் தற்போது ஒவ்வொரு மண்டலத் தலைவருக்கும் 3-4 தொகுதிகளை ஒதுக்கி தோல்விக்கான காரணம் குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்பு நடக்கிறது. இதுவரை 4.5 லட்சம் தொண்டர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. இந்த உட்கட்சி ஆலோசனைகள், கூடுதல் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் உட்பட அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை நோக்கி செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதனபடி திமுகவில் அடிமட்ட நிர்வாகத்தை பலப்படுத்த முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனால் கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 72ல் இருந்து விஜய்யின் தவெகவை போல் 100க்கு மேல்அதிகரிக்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி திமுகவில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 115 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கூடுதலாக நிர்வாகிகளுக்கு பதவி கொடுக்க முடியும் என்பதோடு, இளைஞர்களை தன்வசப்படுத்த முடியும் என்று திமுக தலைமை நினைக்கிறது.

    Advertisement

    அதேபோல் விஜய்க்கு பலமாக இளைஞர்கள், இளம்பெண்கள் தான் உள்ளனர். அதேபாணியில் திமுகவில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர் அணியை உற்சாகப்படுத்தி முக்கிய பதவிகளை வழங்க வேண்டும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாஜக பாணியில் இளம் தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினால் தான் தவெகவை வீழ்த்த முடியும் என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனை முக ஸ்டாலின் உள்வாங்கி நிர்வாகிகள் மாற்றம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதேபோல் தேர்தல் நேரத்தில் முக ஸ்டாலின், விஜய்யின் பெயரை சொல்லி விமர்சனம் செய்வதை தவிர்த்தார். விஜய்யை விமர்சனம் செய்தால் அவர் வளர்ந்துவிடுவார் என்று முக ஸ்டாலின் நினைத்தார். ஆனால் முக ஸ்டாலினின் இந்த செயலே திமுகவிற்கு பின்னடைவாக மாறி உள்ளது. விஜய்யை கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு தாக்கி பேசியிருக்க வேண்டும் என பல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் அரசில் நடக்கும் ஒவ்வொரு தவறுகளையும் சுட்டிக்காட்ட திமுக முடிவு செய்துள்ளது.

    Advertisement

    சென்னையில் கட்சியின் பின்னடைவுக்கு முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவைக் குற்றம்சாட்டிய முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ஐ. பரந்தாமன், இளையோருக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார். ரவீந்திரனும் பரந்தாமனும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காட்பாடி மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளை மேற்பார்வையிட்டு, தவறுகளை மதிப்பிட்டு, திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர்.

    தமிழகத்தில் விரைவில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் உள்பட 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களுக்கு முன்பாக திமுகவின் நிர்வாக சீர்த்திருத்தம் செய்து இந்த தேர்தல்களில் பலத்தை காட்ட வேண்டியது திமுகவிற்கு மிகவும் முக்கியமானதாகும். அதற்குள் மாற்றம் நடக்கிறதா? இல்லையா? என்பதை அறிய நாம் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.

    English Summary

    DMK wants to Organisation change: In the recently concluded Assembly elections in Tamil Nadu, the Tamilaga Vettri Kazhagam emerged victorious and has assumed power. Vijay, has become CM. Amid of this Against this backdrop, significant reports have surfaced indicating that major organizational changes are set to be implemented within the DMK.