உங்க கட்சி மாதிரி நினைச்சீங்களா? மேடையிலயே கண்டிச்சாரே கனிமொழி! கீர்த்தனாவுக்கு திமுக மகளிரணி பதிலடி

  • சென்னை: சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் எம்பி கனிமொழி, மேயர் பிரியா முன்பு பெண் நிர்வாகி ஒருவர் அநாகரீகமாக பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அதனை கண்டித்து இருந்தார் அமைச்சர் கீர்த்தனா. இந்த நிலையில் மேடையில் தளம் தாழ்ந்து பேசியதை மேடையிலேயே கண்டித்தார் கனிமொழி எனவும், தவெகவினர் பொய்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது திமுக மகளிர் அணி.

    Advertisement

    நேற்று சென்னையில் திமுக மகளிரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய திமுக மகளிர் அணி நிர்வாகி ஒருவர் முதல்வர் விஜய் குறித்து சில கருத்துக்களை பேசினார்.

    Advertisement

    முதல்வர் என்றும் பாராமல் பெண் நிர்வாகி தரக்குறைவாக பேசியதாக விமர்சனம் எழுந்தது. இதனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் அமைச்சர் கீர்த்தனா.

    அதில், மேடை நாகரிகம் துளியும் இல்லாமல் பெண்களை தரக்குறைவாக பேசிய திமுக தலைவருக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள். இந்த நிலையில் நாகரீகம் இல்லாத நாராச பேச்சு தான் திமுக மகளிர் அணிக்கு வாடிக்கையா? எனவும், கனிமொழி அமர்ந்திருக்கும் போதே பெண் நிர்வாகி பேசியதை கனிமொழி கண்டிக்கவில்லை. மேயர் பிரியாவும் தரம் கெட்ட பேச்சை கண்டிக்கப் போகிறீர்களா? இல்லை மௌனமாக கடந்து செல்ல போகிறீர்களா? என கூறியிருந்தார்.

    Advertisement

    இந்த நிலையில், சொந்த கட்சி நிர்வாகியாக இருந்தாலும் கனிமொழி மேடையிலேயே கண்டித்ததாகவும், தவெகவினர் பொய்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக மகளிர் அணி பதிலடி கொடுத்துள்ளது.

    இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையில்," மேடையில் தரம் தாழ்ந்து பேசியதைக் கண்டித்து, தவறு நடந்தது தன் சொந்தக் கட்சி மேடையாக இருந்தாலும், 'எதிராளி தரம் குறைந்து பேசினாலும் நம் திராவிட இயக்கத் தரம் குறையக் கூடாது' என அங்கேயே அக்கா கனிமொழி அவர்களும், முன்னாள் அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களும் தட்டிக் கேட்டிருக்கிறார்கள்.

    நடந்தது என்னவென்று தெரிந்தும், உண்மையைத் திரித்துப் பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பது ஏன்? உண்மையை மறைக்கப் பொய் கதைகளைப் பரப்பாதீர்கள். தவறைத் தட்டிக் கேட்கும் இந்த நேர்மையும், அரசியல் நாகரிகமும் தான் திராவிட இயக்கத்தின் அடையாளம்!

    Advertisement
    “தமிழ்நாட்டிற்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வந்ததே திமுக ஆட்சியில் தான்” - சிடிஆர் நிர்மல்குமார்

    Reel விடுவதும்... Reel எடுப்பதும் தான் தவெக வின் DNA-வா? கீர்த்தனா, ஜெகதீஸ்வரி, கனிமொழி எங்கு பிரச்சினை நடந்தாலும், உண்மையைச் சரிபார்க்காமல், யாரோ பகிர்ந்த வீடியோக்களை அப்படியே பதிவிட்டு, அதைத் தங்களுக்குச் சாதகமான கதையாக மாற்றிப் பரப்புவதுதான் உங்கள் அரசியலா? உயர் பதவியில் இருக்கும் நீங்கள், ரூட் மாஃபியாவின் போலிப் பிரச்சாரக் கணக்குகளாக மாறிவிட்டீர்களா?

    அடுத்தவர்களின் பேச்சைக் குறை சொல்வதற்கு முன்பு, உங்கள் அமைச்சர்களும் தலைவர்களும் மேடைதோறும் பேசும் பேச்சுகளையும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளையும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள். உங்கள் தரப்பில் என்ன நடக்கிறது என்பதையும் சுயபரிசோதனை செய்யுங்கள். பெண்களை அரசியலில் முன்னிலைப்படுத்துவதாகச் சொல்லிவிட்டு, பெண் தலைவர்களை வெறும் Paid Influencer கணக்குகளாகச் சுருக்கிவிடுவதுதான் உங்கள் அரசியலா?" என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    DMK’s women’s wing says Kanimozhi condemned inappropriate remarks on stage, responding to Minister Keerthana’s criticism over the Chennai rally.