விஜய் பேச பேச.. பொய் பொய் என அலறிய உண்மை டிடெக்டர் கருவி.. FUN செய்த திமுக மகளிரணி!

  • சென்னை: மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து நேற்று தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, லஞ்சம் ஒழிப்பில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக சிஎம் விஜய் பேசி இருந்தார். இந்த நிலையில் விஜய் பேசியது பொய் என உண்மை டிடெக்டர் கருவியை வைத்து டெஸ்ட் செய்வது போல திமுக மகளிர் அணி கிண்டல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.

    Advertisement

    மதுராந்தகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதிமுகவில் இருந்த தாவிய மரகதம் குமரவேல் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    ஆளும் கட்சி பலத்தோடு தனித்த செல்வாக்கோடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மதுராந்தகம் மரகதம் குமரவேல். ஆனாலும், செல்லும் இடங்களில் அதிமுகவினர் - பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை பார்க்க முடிகிறது.

    இந்த தகவலால் தமிழக வெற்றி கழகத்தினர் கலக்கத்தில் இருந்த நிலையில், தான் பிரச்சாரம் செய்தால் எல்லாம் மாறிவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய். இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மதுராந்தகம் சென்ற விஜய் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். வழக்கம் போலவே சினிமா பாணியில் அவர் பேச்சு அனல் பறந்தது.

    Advertisement

    சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் அவரது பேச்சை ரிலீஸ்களாக கட் செய்து ஃபயர் விட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக வெற்றி கழக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, லஞ்சம் இல்லா நிர்வாகம், ஊழலை ஒழிக்க சாதாரண குடும்பத்தில் இருந்து ஒரு சாமானியன் ஆட்சிக்கு வந்து விட்டேன். தவெக ஆட்சியில் ஊழல் செய்ய முடியாது, மக்கள் பணத்தை தொட முடியாது, மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம் என பேசி இருந்தார்.

    மேலும், பதவியை தவறாக பயன்படுத்தாத தூய சக்தி தவெக, கஜானா காலியாகி நிதி நெருக்கடியில் இருக்கிறது என திமுக அரசை குறித்து பேசி இருந்தார். இந்த நிலையில் அதை வைத்து கிண்டலோடு சேர்ந்த பதிலடி கொடுத்திருக்கிறது திமுக மகளிர் அணி.

    Advertisement

    அதாவது விஜயின் தலையில் உண்மை கண்டறியும் கருவி இருப்பது போலவும், அவர் பேசுவது உண்மையா? பொய்யா? என அந்த கருவி காட்டுவது போல வீடியோவை எடிட் செய்து இருக்கிறது. அதில் விஜய் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பொய் என கிண்டலாக எடிட் செய்யப்பட்டிருக்கும் அந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் திமுகவினர்.

    English Summary

    DMK Women’s Wing shares a satirical video portraying a truth detector as Vijay speaks about women’s safety, drugs and corruption.