“ஊரான் வீட்டு நெய்யில.. உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க!” தவெகவை தாக்கிய முரசொலி

  • சென்னை: கரூர் நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று ஆறுதல் சொல்லி.. அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கியிருந்தார். ஆனால், இந்த பணி ஆணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்திருக்கிறது. இந்நிலையில், விஜய்யின் நடவடிக்கையை விமர்சித்து, "ஊரான் வீட்டு நெய்யில.. உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க" என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தலையங்கம் வெளியிடப்பட்டிருக்கிறது.

    Advertisement

    கரூர் நெரிசல் சம்பவம் என்பது ஒரு விபத்து. அந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை தர வேண்டும் எனில்.. தமிழகம் முழுவதும் நடக்கும் அனைத்து விபத்துகளுக்கும் அரசு வேலை கொடுப்பது சரியாக இருக்குமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    எதிர்த்த கூட்டணி கட்சிகள்

    குறிப்பாக தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வர காரணாக இருந்த, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதே சாராம்சத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தன. இருப்பினும் கூட எதையும் பொருட்படுத்தாமல், முதல்வர் விஜய் பணி ஆணைகளை வழங்கியிருந்தார். இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பணி நியமன ஆணையை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது.

    ஊரான் வீட்டு நெய்­

    நிலைமை இப்படி இருக்கையில், முதல்வர் விஜய்யின் செயல்பாடு குறித்து விமர்சித்து முரசொலி தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "'ஊரான் வீட்டு நெய்­யில உங்க வீட்­டுக்கு ஸ்வீட் செய்­யா­தீங்க' - என்­பது முத­ல­மைச்­சர் விஜய்­யின் புகழ்­பெற்ற பொன்­மொழி ஆகும். இதைப் பனை­யூ­ரில் கல்­வெட்­டாக அடித்து வைத்து பக்­கத்­தில் அவர் உட்­கார்ந்து கொள்­ள­லாம். ஆனால் அவர் செய்­தி­ருப்­பது என்ன?

    Advertisement

    மாலை வைக்­கா­மல் ஓடி வந்­த­வர் தான் விஜய்

    தன்­னைப் பார்க்க வந்­த­வர்­கள் முட்டி மோதிக் காத்­தி­ருப்­ப­தைப் போல ஷூட்­டிங் எடுப்­ப­தற்­காக... பத்து மணி நேர­மாக மக்­க­ளைக் காக்க வைத்து, தண்­ணீர் தரா­மல், சோறு போடா­மல், பசி­யா­லும் மூச்­சுத் திண­ற­லா­லும் செத்து விழ வைத்து... 41 உயிர்­க­ளைச் சட­லம் ஆக்­கி­ய­வர் தான் இன்று முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் உட்­கார்ந்­தி­ருக்­கும் விஜய்.

    ஒவ்­வொ­ரு­வ­ரா­கச் செத்து விழ விழ பார்த்­துக் கொண்­டி­ருந்­து­விட்டு, அவர்­கள் உட­லுக்­குக் கூட மாலை வைக்­கா­மல் ஓடி வந்­த­வர் தான் விஜய்.

    விஜய்க்கு தெரி­யா­மல் ஓட்டு போட்டு விட்­டோம்

    ஒரு வாரம் கழித்து வீடியோ பேசி­னார். ஒரு மாதம் கழித்து அந்­தக் குடும்­பத்தை எல்­லாம் சென்­னைக்கு ஸ்டார் ஹோட்­ட­லுக்கு அழைத்து வந்து, தனித்­தனி அறை­யில் உட்­கார வைத்து தனித்­த­னி­யா­கப் போய் அழு­தார். பணம் கொடுத்­தார். படத்­துக்கு மார்க்­கெட்­டிங் செய்­வ­தைப் போல கட்­சிக்கு மார்க்­கெட்­டிங் செய்­தார். படத்­தைப் பற்­றியே தெரி­யா­மல் டிக்­கெட் எடுப்­ப­தைப் போல மக்­க­ளும் வோட்­டுப் போட்­டார்­கள். படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது, 'நல்லா இல்லை, ஏன் தான் போனோம்னு தெரி­யலை' என்று சொல்­வ­தைப் போல, 'விஜய்க்கு தெரி­யா­மல் வோட்டு போட்டு விட்­டோம்' என்று மக்­க­ளும் சொல்­லிக் கொண்டு இருக்­கி­றார்­கள்.

    Advertisement

    10 ஆவது மாடி: டெல்­லியை ஆள­லாம்

    முத­ல­மைச்­ச­ராக வந்து விட்ட விஜய் என்ன செய்­கி­றார்? தனது டிரஸ் கோட் மாற்­றி­னார். திரா­விட மாடல் ஆட்­சி­யின் திட்­டங்­க­ளுக்கு பேரை மாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார். 'உய­ர­மான இடத்­தில் உட்­கார்ந்­தால் இன்­னும் உய­ர­லாம். 10 ஆவது மாடி­யில் தனது அறை இருந்­தால் டெல்­லியை ஆள­லாம்' என்று பதவி பறி­போ­ன­வர் சொன்­னதை நம்பி தனது அறையை மாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார். அடுத்து முக்­கி­ய­மான வேலையை அவர் செய்து வரு­கி­றார். 'ஊரான் வீட்டு நெய்­யில் தனது வீட்­டுக்கு ஸ்வீட் செய்து' கொண்­டி­ருக்­கி­றார்.

    •கரூர் சம்­ப­வம் தொடர்­பாக உயர்­நீ­தி­மன்­றத்­தால் விசா­ரணை அதி­கா­ரி­யாக நிய­மிக்­கப்­பட்­ட­வரை தனது ஆட்­சி­யில் உள­வுத்­துறை அதி­கா­ரி­யாக நிய­மித்­துக் கொண்­டார்.

    Advertisement

    •உள்­துறை தனது கைக்கு வந்­த­தும், கரூர் வட்­டா­ரத்­தில் காவல் அதி­கா­ரி­க­ளாக, அலு­வ­லர்­க­ளாக இருந்த 19 பேரை தமிழ்­நாட்­டின் வெவ்­வேறு பகு­திக்கு இட­மாற்­றம் செய்து அவர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தார். சி.பி.ஐ. விசா­ரித்து வரும் இந்த வழக்­கில் மிக­முக்­கி­ய­மான சாட்­சி­கள் இவர்­கள். இவர்­கள் அனை­வ­ரை­யும் ஒட்­டு­மொத்­த­மாக மாற்­றி­யது அப்­பட்­ட­மான பழி­வாங்­கும் நட­வ­டிக்கை.

    •மனித உயிர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ராக இறந்து விழுந்து மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள் என்று தெரிந்­த­தும் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­ற­வர் அன்­றைய அமைச்­சர் கரூர் செந்­தில்­பா­லாஜி. அவரை முடக்­கு­வ­தற்­காக, அச்­சு­றுத்­து­வ­தற்­காக, மிரட்­டு­ வ­தற்­காக பல்­வேறு பொய்­வ­ழக்­கு­க­ளைப் போட்டு வரு­கி­றார் முத­ல­மைச்­சர் விஜய். கரூர் தொடர்­பான வழக்­கில் செந்­தில்­பா­லா­ஜி­யை­யும் சி.பி.ஐ. விசா­ரித்­துள்­ளது. எனவே செந்­தில்­பா­லா­ஜிக்கு விஜய் செய்­வது அனைத்­தும் பகி­ரங்க மிரட்­டலே ஆகும்.

    Advertisement

    •அடுத்து 41 குடும்­பங்­க­ளை­யும் அமை­திப்­ப­டுத்த அனை­வ­ருக்­கும் அரசு வேலை என்று அறி­வித்த விஜய், கரூ­ருக்கே சென்று அந்­தக் குடும்­பங்­க­ளுக்கு அர­சா­ணை­களை வழங்கி இருக்­கி­றார். 'ஊரான் வீட்டு நெய்­யில் தன் வீட்­டுக்கு ஸ்வீட்' செய்து கொண்­டார். இதைத்­தான் இப்­போது ரத்து செய்­துள்­ளது சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தின் மதுரை கிளை.

    நங்கு நங்கு என்று கொட்டி இருக்­கி­றது

    ''கருணை அடிப்­ப­டை­யில் வேலை கேட்டு பல­ரும் காத்­தி­ருக்­கும் போது இவர்­க­ளுக்கு மட்­டும் எதன் அடிப்­ப­டை­யில் முன்­னு­ரிமை தரப்­பட்­டது? அர­சுப் பேருந்து விபத்­து­கள், தீ விபத்­து­கள், சாலை விபத்­துக்­கள் என தினந்­தோ­றும் நடக்­கி­றதே? அவர்­கள் குடும்­பத்­தி­ன­ருக்­கும் அர­சுப் பணி கேட்­டால் என்ன செய்­வீர்­கள்? அடிக்­கடி நடக்­கும் பட்­டாசு தொழிற்­சாலை விபத்­து­க­ளில் இறப்­ப­வர் குடும்­ப­மும் அர­சுப் பணி கேட்­டால் தரு­வீர்­களா? ஏரா­ள­மான இளை­ஞர்­கள் அர­சுப் பணிக்­காக காத்­தி­ருக்­கும் போது இவர்­க­ளுக்கு மட்­டும் எப்­படி கொடுப்­பீர்­கள்?'' என்று கேட்­டுள்­ளது உயர்­நீ­தி­மன்­றம். விஜய் பாணி­யில் சொல்­வ­தாக இருந்­தால், 'நங்கு நங்கு என்று கொட்டி இருக்கிறது' உயர்­நீ­தி­மன்­றம்.

    விஜய் ஆட்­சிக்கு சம்­மட்டி அடி

    இறந்­த­வர் குடும்­பத்­தி­ன­ரி­டம், 'உங்­க­ளுக்கு அரசு வேலை தந்­துள்­ளேன்' என்று பெரு­மை­யோடு சொன்­னார் விஜய். ஆனால் நீதி­மன்­றத்­தில் என்ன சொல்லி இருக்­கி­றார்­கள் என்­றால், 'சாதா­ர­ண­மான அரசு வேலை­யைத் தான் தந்­துள்­ளோம்' என்று சொல்லி இருக்­கி­றார்­கள். 'எந்த அர­சுப் பணி­யும் சாதா­ர­ண­மா­னது அல்ல' என்று உயர்­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் உச்­சந்­த­லை­யில் கொட்டி இருக்­கி­றார்­கள். 'பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­துக்கு அர­சுப் பணி தரு­வ­தற்­குப் பதி­லாக திறன்மேம்­பாட்­டுப் பயிற்­சி­கள் தாருங்­கள்' என்­றும் வழி­காட்டி இருக்­கி­றார்­கள்நீதி­ப­தி­கள். இதை­விட விஜய் ஆட்­சிக்கு சம்­மட்டி அடி அடிக்க முடி­யாது.

    தன்­னைக் காப்­பாற்­றிக் கொள்­ளவே, வழக்­கில் இருந்து தப்­பிக்க,தனது தலை­யைக் காப்­பாற்­றிக் கொள்ள, தனது மீதான பழி­யைத் துடைக்ககரூர் குடும்­பங்­களை வளைக்­கப் பார்த்­தார் விஜய். ரீல் அறுந்­து­விட்­டது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    DMK's Murasoli: Chief Minister Vijay had personally visited the families of the victims of the Karur crowd-crush incident to offer condolences and hand over appointment orders for government jobs. However, the Madurai Bench of the High Court has quashed these appointment orders. Amidst this, an editorial in *Murasoli*—the official daily of the DMK—criticized Vijay's actions, stating, "Do not make sweets for your own home using ghee from someone else's house."