ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி

  • சென்னை: ''உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் இடத்திலாவது தவெக வென்றால் ஒரு பக்க மீசையை எடுத்து கொள்கிறேன்'' என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, தமிழக வெற்றிக் கழக்கத்துக்கு சவால் விடுத்துள்ளார். இதனால் தவெக - திமுக இடையே மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    Advertisement

    சென்னையில் நேற்று தவெகவின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக திருவிக நகர் தவெக எம்எல்ஏ பல்லவியை, திமுகவை சேர்ந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவமானப்படுத்தியதாக கூறி கண்டித்தார்.

    Advertisement

    அதோடு தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

    ''நாங்கள் இதுவரை அரசு விழாக்களில் கட்சியை பார்த்தது கிடையாது. ஆனால், மேயர் பிரியா, நமது சகோதரி பல்லவியை, ஒரு மெழுகுவர்த்தியை கூட கொடுக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார். இப்போது, உதயநிதிக்கு நேருக்கு நேர் ஒரு சவால் விடுகிறேன். இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வர விருக்கிறது. 75 வருட திமுகவாக இருந்தால், 25-ல் 1 மேயர் இடத்தையாவது வென்று காட்டுங்கள். எங்களுடைய பல்லவி சகோதரி எப்போது அவமானப்படுத்தப்பட்டார்களோ, அப்போதே நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டோம்" என்று திமுகவிற்கு சவால் விட்டார்.

    Advertisement

    இந்நிலையில் தான் பதிலுக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சவால் விடுததுள்ளார். இதுதொடர்பாக ஆர்எஸ் பாரதி இன்று கூறும்போது, ''
    ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக வின் வரலாறு தெரியாது. 76 ஆண்டுகால தி.மு.க வரலாற்றில் இவரை போல் பலரையும் பார்த்துள்ளது. அவர்கள் எல்லாம் இன்று இல்லை. ரொம்ப வேகமாக பேசினால் மக்கள் அதற்கு திரும்ப பதில் அடி கொடுப்பார்கள் இதுதான் தமிழகத்தின் வரலாறு; இதை ஆதவ் அர்ஜுனா புரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் ஒரு இடத்திலாவது திமுகவால் வர முடியுமா என்று ஆதவ் அர்ஜுனா சவால் விடுக்கிறார்.

    Advertisement

    அடிமடையனுக்கு கூட தெரியும் 1984 தேர்தல் குறித்து. 1984 தேர்தலுக்கு பின்னர் 1986 உள்ளாட்சி தேர்தலில் 102 நகராட்சியில் 90 நகராட்சியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தோன்றிய காலத்தில் இருந்து பல தோல்விகளை கண்டுள்ளோம்; எங்களைப் போல வெற்றி பெற்றவர்களும் கிடையாது. எம்.ஜி.ஆரை விட பெரிய தலைவர்கள் விஜய்யும் அல்ல. மற்றவர்களும் அல்லது.

    முடிந்தால் ஆறு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை வையுங்கள், ஒரு மேயர் இடத்திலாவது தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றால் நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன். இந்த சவாலை ஏற்க தமிழக வெற்றி கழகம் தயாரா?. அதேபோல, ஸ்டாலினுக்கோ உதயநிதி ஸ்டாலினுக்கோ சவால் விடுகிற தகுதி ஆதவ் அர்ஜுனாவுக்கு இல்லை. விஜய்க்கு ஒரு ஆபத்து வரப்போகிறது என்றால் அதற்கு காரணம் ஆதவ் அர்ஜுனா தான்'' என்று கூறியுள்ளார்.

    English Summary

    DMK Organizing Secretary R.S. Bharathi has challenged the Tamizhaga Vettri Kazhagam (TVK), stating, "If TVK wins even a single mayor seat in the local body elections, I will shave off one side of my moustache."