10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அட்வைஸ்!

  • சென்னை: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ரிசல்ட் நாளில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களுக்கு முக்கிய அறிவுரை கூறியுள்ளார். பதற்றம் இல்லாமல் தைரியமாக முடிவுகளை பார்ப்போம் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அண்மையில் நடந்து முடிந்த 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20-ந் தேதி (இன்று) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனால், சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    Advertisement

    மாணவர்கள் தங்கள் क्रां ( www.tnresults.nic.in, www.dgc.tn.gov.in, results.digilocker.gov.in களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித் தேர்வர்கள் தாங்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், முன்னாள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், "10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கியுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இது உங்களுக்கான ரிசல்ட் மட்டுமல்ல!

    Advertisement

    ஆசிரியப் பெருமக்களின் கற்பித்தல் செயல்பாடு எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது? தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்கான ரிசல்ட்-தான் இது. ஆகவே பதற்றம் இல்லாமல் தைரியமாக முடிவுகளை பார்ப்போம். வாழ்த்துகள் " என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    On the day of the Class 10 results, former Minister for School Education Anbil Mahesh Poyyamozhi offered key advice to the students. Anbil Mahesh urged them to view their results with courage and without anxiety.